அதிகமான அளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிடால் தான் உடல் பருமன் அதிகரிக்கும் என்பார்கள். இதற்கு எளிய வழி தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் கொள்ளு சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அது எப்படி என்பதை இனி தெரிந்து கொள்வோம். தேவையானவை கொள்ளு - 1/2 கப் சீரகம் - 1 ஸ்பூன் தனியா - 1...
புத்தளம் – 18ஆவது கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஜுப் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாந்தமையினாலேயே நேற்றிரவு(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து...
இன்று முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 5 தடவைகள் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இன்றிலிருந்து தமது சங்கத்தில் 2 ஆம் கிலோமீற்றருக்கான கட்டணம் 5 ரூபாவால் அதிகரிக்கும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எல். ரோகன பெரேரா தெரிவித்தார். இதேவேளை, இன்று முதல் மேல் மற்றும் தென் மாகாணத்தில் மட்டும்...
தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் 24/10/2018 (புதன்கிழமை) அன்று காலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் - நல்லூர்...
அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை பேணும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட 10 ரூபாய் குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கிடையில் அடுத்த மாதம் முதல் பி.எம்.பீ அரிசி என்ற அரிசி வகையை விற்பனை செய்ய நெல்...
புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ள சொல்லுக்கு ஒருமித்த நாடு என சிலர் அர்த்தம் கூற முயற்சிக்கிறார்கள். இது  தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியும் செயலாளர் நாயகமும் பாரளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தின் அரசியல் அமைப்புச் சபையின் வழிநடத்தல் குழு பிரதமர்...
கொழும்பு நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளில் 173 கிராம் 493 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கொழும்பின் பல்வேறுபட்ட பிரதேசங்களிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயசுமனாராம வீதி ரத்மலானை பகுதியில் வைத்து 10 கிராம் 885 நிறையுடைய ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சுனேத்ரா மல்காந்தி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது...
லுணுவில வடக்கு தம்மிகம பிரதேசத்தில் நேற்று  மாலை  ஜின்ஓயா ஆற்றில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து மீன் பிடிக்கச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த அயேஸ் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு இளைஞர்கள் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இருந்த இடத்தில் மீன்கள் இல்லாதிருந்ததால்...
(மன்னார் நகர் நிருபர்) முசலி பிரதேசச் செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை உடனடியாக  இடமாற்றம் செய்யக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டிருந்தனர். முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில்...
வாகன விபத்தொன்றில் கைதுசெய்யப்பட்ட பெண் வைத்தியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொரலஸ்கமுவ, விக்ரமரத்ன பகுதியில் கார் மற்றும் ஜீப் ரக வாகனமொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்பில் காரைச் செலுத்திய வைத்தியரான பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பெண் வைத்தியரை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்...