மக்கள் தங்களின் காணிகளை தாருங்கள் என கேட்கிறார்கள் . ஆனால் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள்என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த இக்கட்டான நிலையில் பணத்தை கொடுத்து மக்களுடைய காணிகளை பெற்று மக்களிடம் கொடுக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான பெருமளவு பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு படையினருக்கு கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு...
தேசிய பத்திரிக்கைகள் இரண்டில் இன்று வெளியான செய்திகள் பற்றி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகபிரிவு இதனை தெரிவித்துள்ளது. தேசிய செய்திப் பத்திரிகைகளான தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில் 2018.05.25 பிரசுரிக்கப்பட்டுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்” மற்றும் “நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்” எனும் தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எந்தவித உண்மையும்...
கேலாலை மாவட்டம் தெஹியோவிட்ட காயத்திரி தமிழ் வித்தியாலயத்திற்கு 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை மலையக மக்கள் முன்னணியின் தவைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்தக் கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார். பாடசாலையின்  அதிபர் பி.சிவஞானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்திற்கு  கௌரவ அதிதிகளாக கேகாலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜித் பெரேரா ஐக்கியதேசிய கட்சியின்...
(பா.திருஞானம்) கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். இந்த மகாநாட்டிற்கு மேலும் இலங்கையில் இருந்து பிரமுகர்களும் உலகலாவிய ரீதியில் உள்ள நாடுகளின் தமிழ் தலைவர்களும் கலந்தக் கொண்டனர். இதன் போது உலக தமிழ் தலைவர்களின் உரைகளும் அதிதிகள் கௌரவிப்பும்  நினைவு சின்னம் வழங்கள் கலை நிகழ்ச்சிகள் என்பன...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூல வரைவை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோரிடம் ஜே.வி.பி நேற்று கையளித்தது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பானது பகுதி அளவில் அல்லாமல்...
ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும் வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயண ஆசிரியராக பணியாற்றியவர். தற்சமயம் சிட்னியில் கணக்கியல் சார் துறையில் நிர்வாக மேலாளராகப் பணிபுரிகிறார். கவிதையிலும் சிந்தனை இலக்கியத்திலும் அதிக நாட்டம் கொண்ட சௌந்தரி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்...
ராஜஸ்தான் வனப்பகுதியில் அதிக வெப்பத்தின் காரணமாக 11 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே அக்னி நட்சத்திரம் பற்றிய பயம் நம்மை வாட்டி எடுக்கும். இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே பல மாநிலங்களில் வெயிலின் கொடுமை ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதத்துக்கு முன்பே பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தொட்டது. சுட்டெரிக்கும் வெயிலினால் முதியோர்கள், குழந்தைகள் எனப் பலரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு...
யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் குறித்து மேலதிக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் எனப்படும் ‘இன்புளுவன்ஸா வைரஸ்’ தொற்றுக்கான அறிகுறிகளோடு கடந்த சில வாரங்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின்...
கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறையில் இல்லாமல் போகும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதிய பயிற்சியைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்ந்து மேலும் உரையாற்றிய அவர், “இன்று அனேகமான இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தமது நேரத்தினை செலவிடுகின்றனர். மனிதன் மனிதனோடு பேசும் நிலமை மாறி தற்போது...
கனடாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் இரு மர்மநபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். Mississauga பகுதியில் உள்ள இந்தியன் உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு நபர்கள் வழங்கி சென்ற பொருள் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். எனினும் இதுவோரு தீவிரவாத தாக்குதல் அல்லவென Peel மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி Jennifer Evans  செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இரண்டு சந்தேக நபர்களும் Bombay Bhel என்ற...