வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதி ஒதுக்கீட்டின் கீழ் கௌரவ வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் சார்பில் புனரமைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறை கட்டடம் கௌரவ அமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாந்தை சிற்றம்பலம் வித்தியாலயத்தின் வகுப்பறையே இவ்வாறு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வகுப்பறையினை வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்த அமைச்சர்...
அர­சாங்கம் தனது இய­லா­மையை மூடி மறைக்கும் நோக்­கத்தில் இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­வித்து மக்­களை திசை­தி­ருப்­பு­கின்­றது. இந்த ஆட்­சியை கொண்­டு­வந்த முத­லீட்­டா­ளர்கள் மற்றும் மேற்கு நாடு­களின் சக்­தி­களே இன­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்­ளனர் என இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான  முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி  தமரா குண­நா­யகம் தெரி­வித்தார். அன்று தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற...
  உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பகுதியில் கடந்த 1942ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த 1963ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், உடல் அங்கங்களின் செயல்பாடுகளையும், பேச்சுத்திறனையும் இழந்தார். இதனால், நாற்காலியின் துணையுடனே நடமாடிய அவர், கணினி...
அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி தொடங்கிய வன்செயல்கள் பெரிதாகி முஸ்லிம் மக்களுக்கு பெருத்த சேதத்தை உருவாக்கியது. இதனையடுத்து அவ்வாறு ஆண்மையிழக்கச்...
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னம்மை நோய் பரவல் காரணமாகவே பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை மூட மூடப்படுவதாக, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர  தெரிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுள் 27 பேர் கடந்த 3 நாட்களாக அம்மை நோய்க்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. அத்துடன் கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 இலட்ச்சம் ரூபா செலவில் அமைத்த பாடசாலையின் சுற்று மதில் உடைப்பு இலங்கை வான் படையின் நிதியில் இருந்து சுமார் 40 இலட்ச்சம் ரூபா செலவில் அமைத்த பாடசாலையின் சுற்று மதில் உடைப்பு கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் நேற்று...
யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலவும் சீரற்ற கால­நிலை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் அனே­க­மான மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டியை தவிர்த்­தி­ருந்­த­னர். காற்­று­டன் கூடிய மழை மற்­றும் கடல் கொந்­த­ளிப்­பால் யாழ்ப்­பா­ணக் குடா­நாடு மற்­றும் தீவுப்­ப­குதி, வட­ம­ராட்சி போன்ற பிர­தே­சங்­க­ளில் மீன­வர்­கள் ஆழ்­க­டல் மீன்­பி­டிப்பை தவிர்த்துள்ளனர். அதி­க­மா­னோர் கரை­வலை மூலமே மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர். இதனால் கட­லு­ண­வின் வருகை குறைந்­தும், விலை அதி­க­ரித்­தும் காணப்­படுகிறது. வட­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில் இருந்து யாழ்ப்பாண நக­ருக்கு எடுத்து வரப்­பட்ட கட­லு­ண­வு­க­ளின்...
திருகோணமலை பெரியகுளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி மரணமடைந்த ஐவரின் உடலங்களும் நேற்று திங்கட்கிழமை மாலை நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. பெரியகுளம் குளத்திற்கு அருகிலுள்ள கோயிலுக்கு பூசைக்காக அல்லிப்பூ பறிப்பதற்கு தோணியில் சென்ற நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவருமே பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள் தர்மலிங்கம் தங்கதுரை (42), டி. சங்கவி (10),...
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு இன்று 13.03.2018 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர், சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரி வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகலை சந்தித்து கலந்துரையாடினர்.