காலிமுகத் திடலில் கடந்த டிசம்பர் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உத்தியோகபூர்வமாக இந்த மரம் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜுன ரணதுங்க சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இந்த கிறிஸ்மஸ் மரம் திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆறு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமையஇ மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஜெகத் பீ. விஜேவீரவும் நீதி அமைச்சின் செயலாளராக எம்.அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளராக டீ.ஜீ.எம்.வீ.ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளதோடு தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜெயமன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சின் புதிய செயலாளராக கே.மாயாதுன்னவும் தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமுர்த்தி  உத்தியோகத்தர்  மீது நேற்று இரவு வீடு புகுந்து  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவரை சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டார் சேர்ந்து மடக்கிப்பிடித்துள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் கடமை விட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் மீண்டும் வீடுநோக்கிச்சென்றபோது மீண்டும் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். இதன்போது தாக்கியவர்களை வீட்டார்...
இலங்­கையில் சீன அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும்  கொழும்புத்  துறை­முக நகர் திட்­டத்தின் ஒரு கட்­ட­மாக கொழும்பு – கொள்­ளுப்­பிட்டி புகை­யி­ரத நிலை­யத்தில் இருந்து கொழும்பு சைத்­திய வீதி வரையில் துறை­முக நகரம்  ஊடாக பிர­வே­சிக்­கின்ற நிலக்கீழ் கடல் வீதி மார்க்­கத்­தினை நீடிக்கும் வேலைத்­திட்­டத்­தினை துறை­முக நகர வேலைத்­திட்ட நிறு­வ­னத்­துடன் இணைந்து அரச தனி யார் ஒத்­து­ழைப்பு வேலைத்­திட்­ட­மாக செயற்­ப­டு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் இலங்கை அர­சாங்கம் கைச்­சாத்­தி­ட­வுள்­ளது. இது குறித்து பாரிய நகர...
   இலங்­கையில் போர்க் குற்­றங்கள் நடக்­க­வில்லை என்று பிரித்­தா­னிய பிர­புக்கள் சபையில் உரை­யாற்­றிய நெஸ்பி பிர­பு­வுக்கு ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இர­க­சி­ய­மாக நன் றிக் கடிதம் அனுப்­பி­யுள்ளார் என்று கூட்டு எதி­ரணி பாரா­ளுமன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள் ளார். இறுதிப் போரில் ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டது போல 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­ப­ட­வில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரை­யா­ன­வர்­களே கொல்­லப்­பட்­டனர் என்றும், அவர்­களில் கால்­வாசிப் பேர்...
வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். குறித்த பாதீட்டில் கிளிநொச்சி தொடர்பில் விஷேட அபிவிருத்தி முறைகள் அல்லது விஷேட வேலைத் திட்டங்கள் குறித்து எதுவும் இல்லாமையே தான் இந்த முடிவு எடுத்தமைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார். வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி தொடர்பில்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும். இரு தோணியில் கால் வைப்பவர்களை தெரிவு செய்ய வேண்டாமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூன்றாம் நாள் விவாத்தின் அமர்வு இன்று வியாழக்கிழமை (14.12) காலை 10.00 மணியளவில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது, முதலமைச்சர் சரியான நேரத்தில் அவைக்கு வருகை தந்து விட்டார்....
ரஷ்யாவில் ஏழு வயது சிறுவனுக்கு, ராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, Ussuriysk பகுதியில் உள்ள ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு ராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள ராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல, இன்னொரு ஏழு வயது சிறுவனுக்கு கடிதம் வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறினாலும், ரஷ்ய ராணுவம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது. 2001ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை அனுப்புவதற்கு...
தென்னிந்தியாவில் இருந்து வரும் தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் தை மாதம் முதல் ஆவணி...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எங்கே செல்கின்றது என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒவ்வொரு வருடங்களைக் கடக்கும் போதிலும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொய்யான வாக்குறுதிகள் யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டில் தீர்வுகள் எட்டப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சூளுரைத்து வருகின்றது. விடுதலைப்புலிகளின் போராட்டம்...