சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 87 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். எப்படி இந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் படங்களில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகளும்...
நியூசீலாந்து அரசாங்கம் தனது வருடாந்த அகதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையான 750 இல் அவசரகால ஒதுக்கீடாக 600 சிரியா  அகதிகளை எடுப்பதுடன் -மொத்தமாக 750 அகதிகளை எடுப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நெருக்குதலின் அடிப்படையிலேயே உடனடியாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது. தனது வருடாந்த அகதிகள் உள்வாங்கும் தொகையை அதிகரிக்காத நிலை இருப்பதாக தெரிவித்துள்ள அரசு- இன்றுள்ள  ஐரோப்பிய அகதிகள் நெருக்கடி  நிலைமையைக் கருத்தில் கொண்டு 750 சிரிய அகதிகளை அடுத்துவரும் 'உள்  கொள்ளலில்    "  (intake )  எடுக்கப்படும் எனவும் முதலில் 600 பேர் எடுக்கபடுவார்கள் என்றும்...
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று சிறப்பு கண்காட்சி இன்று இடம்பெற்றது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் அன்னாநகர் பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு. உதயன் அவர்களும் திரு சுவர்னராஜா அவர்களும் ( கல்வியற்கல்லூரி பீடாதிபதி ) ஆ. பாலசிங்கம் ( முன்னாள் கோட்டக்கல்வி- பனிப்பாளர் வவுனியா போன்றோரும் கலந்து கொண்டனர்.     தகவலும் படங்களும் - ம.மனோகரன்
வவுனியா தனியார் போக்குவரத்து சாரதி  பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான முச்சக்கரவண்டி  இன்று காலை 10.15 மணி அளவில்  வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை A9 வீதியின் சந்தியில்  தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேரூந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. மேலும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர்கள் இருவர் எனவும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட தருணத்திலே இவ்விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாதுகாப்புக்கடவையில் ( மஞ்சள் கோடு )...
எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக் கொன்ற நாய் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக இறந்தது. நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி உள்ள மிருகத்துக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வர். இதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்த நெகிழ்ச்சி தரும் சம்பவம் இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே செந்தியம்பலம் கதர் காலனியை சேர்ந்தவர் பட்டுராஜன். இவரது மனைவி சாந்தி. இவர் முள்ளன்விளையில் உள்ள தனியார்...
ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரை வைத்தியசாலையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியமையால் அவர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய குறித்த கூட்டுறவு வைத்தியசாலையின் உரிமையாளர் குறித்த பெண்ணை வைத்தியசாலைக்குள் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக குறித்த பெண் விசமருந்தி ஆபத்தான நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இந்தவேளையில் குறித்த...
மட்டக்களப்பு வாவியின் சீ-பிளேன் திட்டத்தினால், வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் டாக்டர். ஓ.கே.குணநாதன், மட்டு அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த மகஜரின் முழு வடிவம் வருமாறு, அரசாங்க அதிபர் கசடசேரி மட்டக்களப்பு அம்மணி சீ-பிளேனின் வருகையினால் நாசமாகும் மட்டக்களப்பு மட்டக்களப்பு நகரின் மத்தியில் லேடி மன்னிங் ட்ரைவில்; இயங்கும் சீ-பிளேனின் கருத்திட்டத்தினால் மட்டக்களப்பு வாவியும் அதனோடு இணைந்த சுற்றாடலும் மிக மோசமாக...
சர்வதேச நாடுகளிடம் எமது நாடு முழங்காலிட வேண்டி வந்துவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் பின்புலங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என அவர் தன்னுடைய முகப்புத்தகக் கணக்கில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பல கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள அவர், எனது தந்தையும் இந்நாட்டின் மீது அதீத பற்றுக்...
யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார். அவரது கணவன் கே.சரவணன் (26) மற்றும் கணவரது நண்பன் அஹமட் லத்தீப் (23) ஆகியோராலேயே அவர் வெட்டப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரியவருகின்றது. சந்தேகநபர்கள் இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்....