அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர்! ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து

136

 

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் செய்தது.

இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஆம்ஸ்டெல்வீன் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 49.2 ஓவரில் 244 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் 64 ஓட்டங்களும், லீடே 56 ஓட்டங்களும், மேக்ஸ் ஓடவுட் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே 4 விக்கெட்டுகளையும், கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் களமிங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் அதிரடியாக 30 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மலான் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆக, பட்லர் களமிறங்கி அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து ஜேசன் ராயும் பொறுப்புடன் ஆட, இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜேசன் ராய் 86 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 64 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, நெதர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. தொடர் நாயகன் விருதை ஜோஸ் பட்லரும், ஆட்டநாயகன் விருதை ஜேசன் ராயும் வென்றனர்.

SHARE