அதிரடியாக ரன் குவித்த தினேஷ் கார்த்திக்!

121

 

தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் தேவையில்லாத ஒரு ஷாட்டால் அவுட்டானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இப்போட்டியில் முதல் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 227 ரன்களை குவித்தது. இதன் பின்னர் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி வீரர்கள் களம் இறங்கினர்.

கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று நேரம் அதிரடி காட்டியது.

வீடியோவை காண

தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதே அதிரடியை அவர் தொடருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் மஹராஜ் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற போது போல்டாகி அவுட்டானார்.

SHARE