இராணு துனைக்குழுக்களால் சிழக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 19 ஆண்டு நினைவு அஞ்சலி

199

இராணு துனைக்குழுக்களால் சிழக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 19 ஆண்டு நினைவு அஞ்சலி 31-05-2023 வவுனியாவில் வவுனியா ஊடக மையத்தினால்
அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது இன்நிகழ்வில் ஊடக மைய தலைவர் செயலாளலர் உற்ப்பட ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டதுடன் அஞ்சலி உரையை தினப்புயல் ஊடகப்பனிப்பாளர் சக்கிவேற்பிள்ளை பிரகாஸ் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஊடகவியலாளர் G.நடேசனின் கொலையுடன் கருணா குழு நடந்தது என்ன

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் என பலருக்கும் தெரிந்தாலும் நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விபரம் பெரிய அளவில் வெளிவரவில்லை.
மட்டக்களப்பு எல்லைவீதியில் வைத்து ஊடகவியலாளர் நடேசனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே சுட்டுக்கொன்றனர்.
அந்த இருவரும் வேறு வழக்குகளில் உள்ளேதான் இருக்கிறார்கள்.
மாமனிதர் யோசப் பரராசசிங்கம் அவர்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் நேரடி தொடர்புள்ளவர் என குற்றம் சாட்டி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன் கடந்த 5 வருடங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி சென்ற போது கைது செய்யப்பட்ட இனியபாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நடேசன் மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள தனது இல்லத்திலிருந்து எல்லை வீதிவழியாக இறைவரி திணைக்களத்தை நோக்கி செல்லும் போது இறைவரி திணைக்கள சந்தியில் காத்திருந்து யாரோ ஒருவர் தகவல் கொடுத்ததும் எல்லைவீதி வழியாக சென்று நடேசன் மீது நடேசனை சுட்டுக்கொன்றவர்கள் பிள்ளையானும் இனியபாரதியும் தான்.
இனியபாரதி மோட்டார் சைக்கிளை செலுத்தி செல்ல பிள்ளையான் பின்னுக்கு இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தார்.
நெஞ்சில் குண்டு பட்ட நடேசன் கீழே விழுந்தார். துப்பாக்கியால் சுட்டவர்கள் சிந்தாமணி பிள்ளையார் கோவில் வரை சென்று மீண்டும் திரும்பி வந்து நடேசன் இறந்து விட்டாரா என்பதை பார்த்து விட்டு இறைவரி திணைக்களப்பக்கம் சென்றனர்.
சிறிது நேரத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்திற்கு வந்தனர். பொதுமக்களும் ஆஞ்சநேயர் மரக்காலை மதிலோரும் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
கொலையாளிகளான பிள்ளையானும் இனியபாரதியும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் திரும்பி வந்தனர். பொதுமக்களுடன் நின்று நடேசனின் சடலத்தை யார் எடுக்க வருகிறார்கள் என அவதானித்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் பிள்ளையானை மட்டக்களப்பு மக்களுக்கு குறிப்பாக மட்டக்களப்பு நகர மக்களுக்கு பெரிதாகத் தெரியாது. பின்நாட்களில் பிள்ளையான் பிரபல்யமாக ஆரம்பித்தபோதுதான், “இவன்தான் ஊடகவியலாளர் நடேசனைச்சுட்டது'” “இவன்தான் விரிவுரையாளர் தம்பையாவை சுட்டது”, “இவன்தான் யாழ் வர்த்தகர்களை வெளியேற்றியது” என்று அடையாளம் காட்ட ஆரம்பித்தார்கள்.

 

SHARE