இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது

270

இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு நாட்டை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இராணுவ தரப்பாக இருந்தாலும் அந்த நாட்டினுடைய புலனாய்வு கட்டமைப்பு மிக ஆணித்தரமாக அல்லது பலப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு ஒரு வளமுயர்ந்த நாடாக போராட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அவ்வாறு இல்லையெனில் உண்மையில் அந்த நாடு அதாள பாதாளத்திற்குள் தொடர்ந்து செல்லும் அதுமட்டுமன்றி அந்நிய நாடுகளினுடைய காலனித்துவத்திற்குள் குறித்த நாடு போகும் என்பது தான் வரலாறு கண்ட உண்மையாக இருக்கும். இராணுவ கட்டமைப்பு என்பது அதனை பலப்படுத்தி வைக்க வேண்டுமாக இருந்தால் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு உறுதியாக இருக்க வேண்டும். அதை பாரக்கின்றபொழுது யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு என்பது மிகவும் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது அதுபோன்று விடுதலைப்புலிகளினுடைய புலனாய்வு கட்டமைப்பாக இருக்கக்கூடிய டெஷி என்ற கட்டமைப்பையும் எதிர்த்து செயற்படக்கூடிய கட்டமைப்புக்களாக இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் TID, CID, NIV போன்ற கட்டமைப்புக்கள் வலுவாக செயற்பட்டன. பலரை கைது செய்து இன்னும் வைத்திருக்கின்றார்கள் விடுதலை இல்லாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ். ஏனென்றால் சில தாக்குதல் நடவடிக்கைகளுக்காக தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டவர்கள் அதுமட்டுமன்றி முக்கிய சில விடயங்களுக்கு சூத்திர தாரியாக செயற்பட்டவர்கள் ஒரு பகுதியினர் காட்டிக்கொடுத்து செயற்பட்டாலும் மறு பக்கத்துலே காட்டிக்கொடுக்காத வகையில் தங்களது சுய ஈடுபாட்டினூடாக இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் இந்த நாட்டை காப்பாற்றுகின்றோம் என்ற போர்வையில் அல்லது போராட்டத்தின் முடிவிற்கு 49 நாடுகளினது உதவிகள் உடனும் இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளினுடைய அந்த புலனாய்வு கட்டமைப்புக்களினுடைய ஒத்துழைப்புடன் போராட்டம் முற்றுகைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரான இராணுவ புலனாய்வு கட்டமைப்பு தொடர்பாகத்தான் நாங்கள் தற்பொழுது பார்க்க இருக்கின்றோம். இந்த இராணுவ புலனாய்வு கட்டமைப்பு முதலாவது பகுதியாக கடல் பிராந்தியங்களை கோட்டை விட்டது. கடல் பிராந்தியங்களிலே இங்கு வரக்கூடிய ஹரோயின் கஞ்சா போன்ற பொருட்களை இந்த நாட்டுக்குள்ளே கடற்படைகள் கோட்டைவிட்டது இதற்கும் புலனாய்வு கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது. அதுபோன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த NIV பதில் கூற வேண்டும் இந்த NIV கோட்டைவிட்டதனால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பல போதை வஸ்து பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டு அதனூடாக பல ஆயுத கடத்தல்களும் இடம்பெற்ற சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. அதுபோன்று அடுத்தகட்டமாக பார்த்தால் உள்ளுரில் இடம் பெறும் போராட்டங்கள் இவற்றிலே சஹரானினுடைய பயங்கரவாத கட்டமைப்பு தலைதூக்கி நூற்றுக் கணக்கான மக்களின் இறப்பிற்கும், தேவாலயங்கள் தாக்கப்படுவதற்கும் ஒரு காரணமாக அமைந்திருந்தார்கள். எனவே இந்த காரணங்களை வைத்து பார்க்கின்றபொழுது இந்த நாட்டுக்குள் உண்மையிலே ஒரு சதிவலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சதிவலையை முறியடிப்பதற்கு இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. தற்பொழுதும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தியை அறிவித்ததும் அந்த புலனாய்வு கட்டமைப்பிற்கே ஒரு நம்பிக்கை இல்லாது போன்று இவர்கள் பலரிடமும் விசாரிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருப்பது என்பது உண்மையில் அது புலனாய்வு கட்டமைப்பிற்கே கெட்கம்கெட்ட வேலையாக இருக்கின்றது. ஏனென்றால் உதாரணமாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம் அல்லது அவரை நாங்கள் சுட்டுவிட்டோம் அல்லது கடலில் தூக்கி வீசிவிட்டோம் சரணடைந்து அதன் பின்னர் தான் அவரை சுட்டுக்கொன்றார்கள் என்றெல்லாம் பலவாறு கூறப்படுகின்றது. அதுபோன்று அவர் தப்பிச் செல்லும் பொழுது சுடப்பட்டார் என்று கூறப்படுகின்றது. 17 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி ரமேஷ் அவர்கள் கண்டார் அதன் பின்னர் காணவில்லை என்ற இராணுவ தரப்பிடம் கூறுகின்றார் இவ்வாறெல்லாம் செய்திகள் இருக்கின்றது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தினுடைய விவரங்கள் அல்லது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பல விடயங்கள் மறுக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா என்ற நிலைமையும் இருக்கின்றது. எனவே இந்த நாட்டில் எவ்வாறு போராட்டம் இடம்பெற்றது என்ற மீளாய்வு செய்யப்பட்டு எழுதும் பொழுது எவ்வாறு இந்த சூழல் ஏற்பட்டது என்பது கண்டிப்பாக எழுதப்படும். எனவே இராணுவ புலனாய்வு கட்டமைப்பு என்பது சரியாக தொழிற்படவில்லை அல்லது NIV, CID, TID சரியா தொழிற்படவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக பார்க்கின்றபொழுது இந்த நாட்டினுடைய வளர்ச்சியை மலுங்கடிக்கின்ற வகையில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்திலே பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தியை புலனாய்வு கட்டமைப்பும் தற்பொழுதும் தேடிக்கொண்டிருப்பது என்பது ஒரு வேடிக்கைக்குரிய விடயம், டீ என் ஏ பரிசோதனையைக் கூட இவர்கள் கொடுக்கவில்லை என்பது மற்றுமொரு விடயம். எனவே தற்பொழுது உலக நாடுகள் இணைந்து அல்லது இந்தியா தனது ஆதரவை சர்வதேச ரீதியில் திரட்டும் வகையிலும் அல்லது மீளவும் இலங்கை தீவிற்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தும் வகையிலும் இவர்கள் செயற்படுகின்ற விதம் என்பது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்தே அதனை செய்ய முடியும் என்பதை இந்தியா உறுதிப்படுத்திக்கொண்டு தற்பொழுது ஒரு மிரட்டலை விடுத்திருக்கின்றது. பிரபாகரன் உயிருடன் இருந்தால் அல்லது இல்லாது விட்டால் அது வேறுவிடயம் இவர் ஒரு போராட்ட வீரன், தியாகி தனது குடும்பத்தையே இந்த போராட்டத்தில் அர்ப்பணித்தவர் என்று பார்த்தாலும் மறுபுறத்திலே இதனை வைத்து அரசியல் செய்கின்றபொழுது இந்த அரசியலிலே எமக்கு ஆபத்து நேரிடுமோ என்ற பயம் கூட இந்த புலனாய்வு கட்டமைப்பிற்கு இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் அவர்கள் கோட்டைவிடுகின்ற ஒரு நிலைமையும் பார்க்கமுடிகின்றது. ஏன் இவ்வாறு அவர்கள் செயற்பட வேண்டும் அவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள ஏன் முடியவில்லை அல்லது இவ்வாறான பேச்சுக்கள் வருகின்றபொழுது ஏன் அவர்கள் மக்களை துன்புறுத்துகின்றார்கள், அல்லது மக்களை கூட்டிக்கொண்டே விசாரிக்கின்றார்கள் இதனை எல்லாம் அவர்கள் கைவிட்டுக்கொண்டு உண்மையில் இந்த நாட்டில் என்ன இடம்பெறுகின்றது இந்த நாடு பாரிய பொருளாதார பின்னடைவிற்குள் செல்வதற்கு காரணமான நாடுகளின் தூதரங்களை இங்கிருந்து அகற்றுவதன் ஊடாக அதனை செயற்படுத்தமுடியும். மற்றுமொரு விடயமாக இந்த பொறுப்புக்களை அதாவது TID, CID, NIV அவர்களுக்கான அதிகாரத்தையும் முழுமையாக இந்த அரசாங்கம் மற்றும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குகின்றபொழுது தான் அவர்கள் தாங்கள் ஒரு சுயாதீனமாக தங்களது வேலைத்திட்டங்களை செய்வதற்கு அவர்களுக்கு சரியான வழி அமையப்பெறும். எனவே அவ்வாறு செய்தால் மட்டுமே அதற்கான நிலைமைகளை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதே இன்றைய நிலைமையாக இருக்கின்றது. எனவே இந்த புலனாய்வு கட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கை மிகவும் பாரியதொரு இக்கட்டான நிலைக்குள் சென்றுகொண்டிருக்கின்றது. அந்நிய நாடுகள் தமது சொற் பிரயோகத்தினாலும் அல்லது இரகசிய நடவடிக்கைகளினாலும் இந்த நாட்டை சூறையாடுவதற்கு அவர்கள் வலைவிரித்திருக்கின்றார்கள். இந்த வலையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாட்டினுடைய புலனாய்வு கட்டமைப்பை பலப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றே கூறவேண்டும். எனவே இந்த நாட்டுக்குள் தற்பொழுது களமிறங்கியிருக்கின்ற அந்நிய நாடுகளினுடைய புலனாய்வு கட்டமைப்புக்களை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இவர்கள் என்ன என்ன ரீதியிலே இந்த நாட்டுக்குள் உள்நுழைந்திருக்கின்றார்கள் என்று பார்க்கின்ற பொழுது வியாபாரிகளாக அல்லது உல்லாச பயணிகளாக அதுமட்டுமன்றி தூதரங்களில் வேலை செய்பவர்களாக இவர்களை கண்காணிக்க வேண்டும் இவர்களை உயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது தற்பொழுது உள்ள ஜனநாயக அலுவலகங்களிலோ ஏனைய பகுதிகளில் குடியிருக்க விடக்கூடாது காரணம் என்னவென்றால் அங்கிருந்து செய்மதிகள் ஊடாக கையடக்க தொலைபேசி ஊடாக அவர்கள் ஹக் பன்னிக்கொள்வார்கள் எங்கிருந்தெல்லாம் செய்திகள் வருகின்றன என்பதனை. இதில் மிக அவதானமாக இருக்க வேண்டும் ஏனென்றால் தற்பொழுது சிறிய பயோஜிப் ஊடாகவே அதனை ஹக் செய்யக்கூடிய நடவடிக்கைகள் இருக்கின்றது. எனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சில விடயங்கள் கூட ஹக் செய்யப்பட்டது. மகிந்த ராஜபக்சவினுடைய விடயங்கள் ஹக் செய்யப்பட்டது அதுபோன்று தற்பொழுது ரணில் விக்ரமசிங்கவினுடைய விடயங்களும் ஹக் செய்யப்படுகின்றது. புலனாய்வு கட்டமைப்பினுடைய எதிர்வு கூறல்களை ஹக் செய்யப்பட்டு அவை ஊடக பரப்பிலே வெளியிடப்படுகின்றது.
எனவே ஊடகப் பரப்பலிலே வெளியிடக்கூடிய வகையிலே இந்த புலனாய்வு கட்டமைப்பு பின்னடைவை சந்தித்திருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் நாடு குட்டிச்சுவராகிப்போவதற்கு நாம் ஒருபோதும் அனுதிக்க கூடாது உள்நாட்டு போர் என்பது தமிழினத்திற்கான ஒரு விடுதலை வேண்டும் என்பதை கோரித்தான் நாம் போராடினோம் எனவே இதில் கூறப்படும் விடயம் என்னவென்றால் இந்த நாட்டை நாங்கள் பாதுகாப்பதற்கு முன்னின்று செயற்பட வேண்டும். அந்நிய நாட்டு புலனாய்வு கட்டமைப்புக்கள் இந்த நாட்டுக்குள் தொடர்ந்தும் செயற்படுவாராக இருந்தால் அது தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் மிகவும் பாதிக்கப்படும் என்பது இன்றைய நிலைப்பாடாக இருக்கின்றது.
எனவே இந்த நாட்டிலே 30 வருட கால யுத்தம் பிறைசூடிப்போயுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம் சர்வதேச ரீதியாக பலம் பெற்றுள்ள ஒரு நிலையில் சர்வதேச விடுதலைப்புலிகளினுடைய அரசியல் கட்டமைப்பு பலம் பெற்றுள்ள ஒரு நிலையில் மீளவும் இந்த நாட்டுக்குள் ஒரு ஆயுத போராட்டத்தை கொண்டுவருவதற்கு இந்த நாடுகள் முயற்சிக்கின்றனவா என்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டிருக்கின்றது காரணம் அவர்களது சுயலாப அரசியலுக்காக. ஏனென்றால் இலங்கையிலே ஒரு போர் நடந்துகொண்டிருந்தால் மட்டுமே இலங்கை அரசை தான் அடிபணிய வைக்க முடியும் என்ற மமதையில் தான் இன்று இந்திய அரசு செயற்படுகின்றது.
எனவே இந்திய அரசு பல வழிகளில் உதவிகள் புரிந்தாலும்கூட தற்பொழுதுள்ள நிலையில் இலங்கையை குட்டிச்சுவராக்கப்போகின்ற நடவடிக்கைகளிலே இந்தியாவினுடைய ரோ களமிறங்கியிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் நாம் கூறவேண்டும் அதற்கான அரண்களை போடுவதாக இருந்தால் TID, CID, NIV போன்ற இலங்கையில் உள்ள புலனாய்வு கட்டமைப்பிற்கான அதிகாரத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் கூடுதலாக வழங்கப்படுவதனால் அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டு தொழினுட்பம் வாய்ந்த கருவிகளை இந்த நாட்டுக்குள் கொண்டுவந்து அந்த கருவிகளை வைத்து இன்று ஸ்ரேல் நாட்டை பார்த்தால் அயன்டோம் என்ற ஒன்றை உருவாக்கி எந்தவொரு மிசேனும் அங்கு விழுந்து வெடிக்காத அளவிலே அவர்கள் தமது தொழினுட்பத்தை வளர்த்திருக்கின்றார்கள் என்றால் இலங்கை ஒரு சிறிய தீவு இந்த தீவையும் நாங்கள் காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அரசியல் ரீதியான விடயங்களில் தமிழ் மக்களின் ஈழப்போர் சம்பந்தமான விடயங்கள் கையாளப்படவேண்டி இருக்கின்றது. எனவே இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் சீராக இயங்காத பட்சத்தில் இந்த நாடு மிகவும் ஒரு அதாள பாதாளத்திற்குள் செல்லும் என்பதனை நாம் எச்சரிப்பு பதிவாக இதனை பதிவு செய்கின்றோம்.

– இரணியன்

SHARE