உங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை இனி குப்பையில் வீசாதீர்கள்! ஏன் தெரியுமா?

291

 

செல்போனானது கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் உலோகம் போன்ற மிகவும் பொதுவான பாகங்களுடன், பல பொருட்களால் உருவாக்கப்படுகிறது.

கண்ணாடி செல்போனின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே,அதிலும் குறிப்பாக போனின் திரை கண்ணாடியால் ஆனது. ஆனால் இவையாவும் எந்தவொரு பழைய கண்ணாடியாலும் ஆனது அல்ல. இந்த மொபைல் கண்ணாடியானது அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்சைடு-ல் இண்டியம் டின் ஆக்சைடு-ன் மிக மெல்லிய அடுக்கு சேர்த்து உருவாக்கப்படுகிறது. எனவே நீங்கள் அதை சேதப்படுத்தாமல் போன் திரையை தொட முடியும்.

மோட்டோரோலா, சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற உற்பத்தியாளர்களின் சில ஸ்மார்ட்போன்கள், கொரில்லா க்ளாஸ் எனப்படும் கார்னிங் ஆல் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் மெல்லிய மற்றும் இலகுரக கடினமான கண்ணாடி திரையை கொண்டுள்ளன. அலுமினிய ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படும் ஷப்பயர் என்ற பொருள் கொரில்லா க்ளாஸை விட மூன்று மடங்கு கடினமாக இருப்பதால், சில ஸ்மார்ட்போன்கள் கண்ணாடிக்கு பதிலாக இது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

செல்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கருத்தில் கொண்டால், இந்த சாதனங்களை குப்பைத்தொட்டிகளில் போடாமல் இருப்பது சிறந்த முடிவு. பல ஆய்வுமுடிவுகளின் படி ஒவ்வொரு வருடமும் 140 மில்லியன் செல்போன்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.

உங்கள் பழைய போன்களை குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் செல்போன்கள் மறுசுழற்சி மையங்களுக்கு வழங்கலாம்.

நீங்கள் உபயோகப்படுத்தும் செல்போன் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

நாம் பயன்படுத்தும் செல்போனை உருவாக்க பல்வேறு வகையான உலோகங்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலும் அலுமினியம் உலோகங்களே பயன்படுத்தப்படுகின்றன மற்றும் இலகுரக பொருட்கள் பொதுவாக போன் கேஸில் பயன்படுத்தப்படுகின்றன.லித்தியம் கோபால்ட் ஆக்சைடு மற்றும் கார்பன் கிராஃபைட் ஆகியவை பேட்டரிகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. தங்கம், செம்பு மற்றும் வெள்ளி போன்றவை தொலைபேசி ஒயர்களிலும், பிளாட்டினம் மற்றும் டங்ஸ்டன் சர்க்யூட்களிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE