என் இரண்டாவது வீடு இந்தியா! சுதந்திர தின வாழ்த்து கூறிய வெளிநாட்டு வீரர்கள்

122

 

டேரன் சேமி 22 ஐபிஎல் போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 295 ஓட்டங்கள் மற்றும் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த பின்னர், இந்தியாவில் டேவிட் வர்னருக்கு ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டேரன் சேமி, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டேரன் சேமி. 38 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில்,’இது தான் எனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடிய இடம். இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். சிறந்த நினைவுகளை தந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது பதிவில், ‘இந்தியாவில் உள்ள எனது அனைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்தியா அன்பான, நிம்மதியான எனது இரண்டாவது வீடு’ என தெரிவித்துள்ளார்.

SHARE