ஐ.நாவில் தமிழர் தரப்புக்கு சாதக பொறிமுறை

120

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள பொறிமுறைக்குள் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு குறித்த விடயதானம் முன்னகர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று(5) இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் ஜெனிவாவில் இருந்து விசேட காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதனை கோரிக்கையாகக்கொண்டு இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தினை சர்வதேச நாடுகள் முன்னிலையில் வலியுறுத்தலாம்.

இன்றைய நிலவரம்

அதனை முகாந்திரமாக வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் கண்டிப்பாக இலங்கை மீதான விடயத்தில் தலையிடுவதற்கான ஏதுநிலை உள்ளது.

அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் உறவுகள் இந்திய மத்திய அரசுக்கு இதனை எடுத்துரைத்து, அந்தச் சரத்தை பயன்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியையும் அரசியல் அதிகார பகிர்வினையும் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து இந்தியாவிடம் இதற்கான ஏதுநிலைகளை உருவாக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE