ஒன்றாரியோ மருத்துவர்களினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

101

 

ஒன்றாரியோ மாகாண மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

கோவிட்19 மற்றும் சளிக் காய்ச்சல் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

மாகாணத்தில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நிலவி வரும் கடுமையான தட்டுப்பாட்டு நிலையினால் சிகிச்சை வழங்குவதில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மாதங்களில் நோய் நிலைமைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளக அரங்குகளில் மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் கோவிட் தொற்று பரவுகை அதிகரிக்கும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரியான நேரத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்றாரியோ மருத்துவ ஒன்றியத்தினால் இணைய வழியில் நடாத்தப்பட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்ற மருத்துவர்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் பாரதூரமான சுகாதார கேடுகளை தவிர்க்க முடியும் எனவும் வைத்தியசாலைகளில் நிலவி வரும் நெருக்கடி நிலைகளினால் வைத்தியசாலை அனுமதியை தவிர்த்துக்கொள்ளவும் முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE