கனடாவில் இந்த மொழி பேசுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியா?

106

 

கனடாவில் பிரெஞ்சு மொழியை பேசுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக் மாகாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த நிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் யுகோன் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பிரெஞ்சு மொழி பேசுவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கனடாவில் ஆங்கில மொழியை தங்களது அதிகாரபூர்வ மொழியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.இதேவேளை, பிரெஞ்சு மொழியை அதிகாரபூர்வ மொழியாக பேசுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

கனடாவில் குடிப்பெயர்வாளர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த மொழிசார் விடயங்கள் நிர்ணமாகின்றது என லாவல் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஜேன் பியரே கொர்பில் தெரிவித்துள்ளார்.

தற்காலிக அடிப்படையில் கியூபெக்கில் தங்கியிருப்போர் எண்ணிக்கையின் அடிப்படையில் அங்கு பிரெஞ்சு மொழி பேசுவோர் விகிதம் மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE