காவல்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

75

 

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என காவல்துறை தலைமையகம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதும் நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளைத் திறக்குமாறு மக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் கடமையல்ல
நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறக்க காவல்துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் கண்காணிக்கப்பட்டது.

எரிபொருள் தாங்கிகளை திறப்பது காவல்துறையினரின் கடமையல்ல, அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே தலையிட்டு, இவ்வாறு எரிபொருள் தாங்கிகளை திறக்க முடியும்.காவல்துறையினர் திறக்க முயன்றால், நாசகாரர்களாலோ அல்லது விபத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும்.

அழுத்தம் கொடுக்க வேண்டாம்
எனவே, பெட்ரோல் நிலையங்களில் உள்ள நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறக்குமாறு, பெட்ரோல் நிலையங்களில் பணியில் இருக்கும் காவல்துறையிடமோ , ஏனைய காவல்துறையினரிடமோ அழுத்தம் கொடுக்க வேண்டாம் என, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

SHARE