ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

63

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.

முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

maalaimalar

SHARE