தலையில் வழுக்கை விழுகிறதா?

652
முடி என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே அழகு தரக்கூடிய ஒன்று.எது பொருந்துமோ அந்த வகையான சடைகளையே தெரிவு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக பொருத்தமில்லாத சடைகளை போட்டு மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகக்கூடாது.அடர்த்தியான முடி , ஆனால் குட்டையா முடி இருக்கிறவர்கள் , வழுவழுப்பான எண்ணெய்களை உபயோகிக்கவே கூடாது.முடிகொட்டுவது ஏன்?

1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.

2. அடிக்கடி காபி, டீ போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

3. எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)

எண்ணெய் பதார்த்தங்கள்(oily food)

புளிப்பு உணவுகள் (acidic food )

இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.

4. அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.

5. உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலவீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.

6. டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும்.

7. அடிக்கடி ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை உபயோகிப்பதாலும் முடிக்கொட்டுதல், முடி வெடித்தல், முடி செம்பட்டையாதல் ஆகியன உண்டாகலாம்.

தலைமுடி தாராளமாய் வளர சில குறிப்புகள்

1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.

2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.

6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.

7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும்.

8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.

மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்

1. தேங்காய் எண்ணெய்

2. ஆமணக்கு எண்ணெய்

3. கருஞ்சீரக எண்ணெய்

4. ஆலிவ் எண்ணெய்

5. நெல்லிக்காய் எண்ணெய்

6. செம்பருத்தி எண்ணெய்

7. கரிசலாங்கண்ணி எண்ணெய்

8. பொன்னாங்கண்ணி எண்ணெய்

9. கற்றாழை எண்ணெய்

10. சவுரிப்பழ தைலம்

மேற்படி எண்ணையை கிண்ணத்தில் தேவையான அளவில் எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, கிண்ணத்தில் நீரில் அமிழ்த்தி எண்ணையை சூடு செய்து உபயோகிக்க வேண்டும்.

SHARE