தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல்

84

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் இருக்கும் ராணுவ தொழிற்சாலையின் மீது நேற்று முன்தினம் இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளுடன் 3 டிரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 2 டிரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், ஒரு டிரோன் மட்டும் ராணுவ தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது.

டிரோன் விழுந்து வெடித்ததில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

maalaimalar

SHARE