மாமனிதன் திரைவிமர்சனம்

111

 

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மாமனிதன். 2017ஆம் ஆண்டு துவங்கி. 2022ஆம் ஆண்டு பல பிரச்சனைகளையும், வலிகளையும் கடந்து, காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மாமனிதன் இன்று வந்துள்ளார். இப்படத்தின் மேல் ரசிகர்கள் வைத்திருந்த முழு எதிர்பார்ப்பையும் மாமனிதன் முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

மாமனிதன் திரைவிமர்சனம்

கதைக்களம்
ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ராதாகிருஷ்ணன் { விஜய் சேதுபதி }, தனது மனைவி இரு பிள்ளைகளுடன் தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில், மாதவன் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர் தனது நிலத்தை விற்க அங்கு வருகிறார். தனது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கும் விஜய் சேதுபதி, இந்த சமயத்தை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகிக்கிறார்.

மாதவன் விற்க வந்த நிலத்தை, மக்களிடம் பேசி இந்த நிலத்தை நான் உங்களுக்கு விற்று கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார் விஜய் சேதுபதி. அதற்காக தனக்கு கமிஷன் தரவேண்டும் என்று கூறுகிறார். இதன்பின், ரியல் எஸ்டேட் புரோக்கராக விஜய் சேதுபதி என்ன செய்தார்? தனது பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தாரா? இல்லையா? ராதாகிருஷ்ணன் மாமனிதன் ஆனார்? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் இரு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வரும் பல காட்சிகள் அனைவரைம் கைதட்ட வைக்கிறது. மனைவி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை காயத்ரி சிறந்து விளங்குகிறார். சிக்கந்தர் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரு சோமசுந்தரத்திற்கு தனி க்ளாப்ஸ்.

மாதவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாஜிசேன், கஞ்சா கருப்பு, கே.பி.ஏ.சி. லலிதா, அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி அனைவரும் அழகாக வந்து எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கதைக்களம், இயக்கம் என சிறந்த விளங்கும் சீனு ராமசாமி, திரைக்கதையில் நமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார். முதல் பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியிலும் அதே போல் தொடர்கிறது.

இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மனதில் இடம்பிடிக்கவில்லை. எம். சுகுமாரின் ஒளிப்பதிவு சூப்பர். ஸ்ரீகர் பிரசத்தின் எடிட்டிங் ஓகே.

க்ளாப்ஸ்

சீனு ராமசாமியின் இயக்கம், கதைகளம்

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிப்பு

ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

திரைக்கதை

பாடல்கள், பின்னணி இசை

மொத்தத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் மாமனிதன்
2.75 / 5

SHARE