முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் மே 18 இன்று பெரும் திரளான மக்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்

219

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் மே 18 இன்று பெரும் திரளான மக்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்
குறிப்பாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 140000 பேர் வரை கொல்லப்பட்டதாக மறைந்த முன்னாள் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்


முள்ளிவாய்க்கால் தொடர்பான உண்மைகளை நேர்மையாக பதிவு செய்ய தவறுகின்றமை எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும்.
எமது சந்ததிக்கு தெரிந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில், தமிழ் பேசும் மக்கள் மீது யுத்தவாதிகளால் வலிந்து திணிக்கப்பட்ட யுத்தம் படிப்படியாக உக்கிரமடைந்து 2009 ம் ஆண்டு தொடக்க த்திலிருந்து ஏப்ரல், மே மாதங்கள் வரை தமிழ் மக்கள் எதிர்கொண்ட அனர்த்தங்களும் அழிவுகளும், படுகொலைகளும் அராஜகங்களும் நோய்களும் பட்டினிச்சாவுகளும் பல்லாயிரக்கணக்கான அனியாய சாவுகளும் எமது மக்கள் எதிர்கொண்ட வரலாறு காணாத அனர்த்தம் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது.
நடைபெற்ற இந்த பேரவலத்தின் நேரடி சாட்சிகளான பல ஆயிரக்கணக் கானோர் இன்றும் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்.
இவர்களில் சமூகத்தின் சகல தர நிலைகளில் உள்ளவர்களும் இருக்கின்றனர். யுத்த பிரதேசத்தில் நேரடித்தாக்குதலுக்குளான வைத்திய சாலை களில் தமது உயிரையும் துச்சமென கருதி சேவைகளை வழங்கிய டாகடர்கள் , தாதி மார்கள் மற்றும் சமூகப்பொறுப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், கலைஞர்கள், போராளிகள், மற்றும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், இந்த பேரவலத்தின்போது இறுதி வரை போராட் டத்தலைமையுடன் நேரடி தொடர்பிலிருந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், லங்கா மண் கப்பல் மூலம் யுத்தத்தில் சிக்குண்டிருந்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கொண்டு செல்ல முயன்றோர். கடைசி நிமிடம் வரை யுத்த செய்திகளையும், நேர்காணல்களையும் காட்சிகளையும் நேரடி ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் யுத்த முனையில் இராணுவ தரப்பிலிருந்த (embedded ) செய்தியாளர்கள் போன்றோர் இன்னும் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
இவர்கள் ஏராளமான தகவல்களை ஏற்கனவே பொதுவெளியில் பதிவுசெய்தும் இருக்கிறார்கள். இவற்றில் பெரும்பான்மையானவை தத்தமது பார்வையில் (Subjective ) பதிவுசெய்யப்படுள்ளது.
ஆனால் இந்த பதிவுகள் பொதுமக்களின் பார்வையிலிருந்து நேர்மையாகவும் எதிர்காலசந்ததியினர் உண்மையான வரலாற்றை புரிந்துகொள்ளும் வகையிலும் புலமைத்துவமுள்ள வரலாற்று அறிஞர்களால் கரிசனையுடன் தொகுக்கப்பட்டதாக தெரியவில்லை மாறாக அரசியல் தேவைகளுக்காக மே18 என்பதை இளைஞர்களை உணர்ச்சியூட்டி அரசியல் இலாபங்களை பெறும் நோக்கங்களை அடைவதற்கான ஒரு நாளாகவே சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல என்பதே உண்மையாகும்.
மேலும் மே 18 என்பது இந்த யுத்தங்களில் சிக்குண்டிருந்த , பல்லாயிரக்கணக்கோனோர் இந்த தினத்தை எப்படி உணர்வார்கள் என்பதும் நேர்மையுடனும் உணர்ச்சிகளுக்கப்பால் அவர்களது பார்வையிலிருந்து சரியாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது கருத்துக்களும் (Narrative ) உண்மை சாட்சியங்களாக பதிவு செய்ய முயற்சிகள் எடுக்கப்படல் வேண்டும்.
இழப்புக்கள் , வலிகள், ஆற்றாமை, இனம் தோற்கடிக்கப்பட்டது என்கின்ற உணர்வுகளுக்கப்பால் யதார்த்தத்தை ( Reality )பார்க்கும்போது “நான்காவது ஈழ போராடடம் ” என்று பிரகடன ப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட யுத்தத்தினால் மக்கள் முகம் கொடுத்த இன்னல்களும் இழப்புகளும் அவலங்களும் முடிவடைந்த நாளாகவும் பார்க்கப்படல் வேண்டும் என்கின்ற பார்வையையும் புறந்தள்ள முடியாது என்பதே உண்மை.
நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ? மே 18 பற்றிய உங்கள் உணர்வுகளென்ன? வன்மம், காழ்ப்புணர்வு, வீரபிரதாபம், அரசியலுக்காக நியாயப்படுத்துதல் என்பவற்றை தவிர்த்து உண்மையான தகவல்களை தேடுதலும் தொகுத்தலும் என்கின்ற அடிப்படையில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். இதுபற்றி முக்கியமாக காலம் தாழ்த்தாமல் தொகுக்கப்படவேண்டிய ஆவணங்கள் தகவல்கள்
SHARE