மூடப்பட்ட மச்சு பிச்சு சுற்றுலாத்தலம்

82

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் அதிபர் காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின. போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் லிமாவில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார்.

லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

maalaimalar

SHARE