ரொறன்ரோவில் ஆரம்ப பாடசாலை அருகாமையில் துப்பாக்கிச் சூடு!

92

 

ரொறன்ரோவில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கிப்லிங் மற்றும் பின்ச் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள சில்வர்ஸ்டோன் ட்ரைவில் இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியல் பொலிஸார் சில தோட்டாக்களை மீட்டுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 416-808-2222 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE