100 வது ஒருநாள் போட்டியில் இலங்கை – நியூஸிலாந்து

107
நியூஸிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார்.

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை (25) ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் தனஞ்சய டி சில்வா 7 ஆவதாக களம் இறங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தனஞ்சய டி சில்வா அதனை தொடர்ந்து வரும் இரு போட்டிகளிலும் கலந்து கொள்ளவது கேள்விக்குறி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து தசுன் சானக கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் போட்டிக்கு நன்கு தயாராக உள்ளோம். எஞ்சலோ மெத்யூஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். நியூஸிலாந்து அணி சிறப்பாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற நாம் கடினமாக உழைக்க வேண்டும்.”

இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100 வது ஒருநாள் போட்டியாக அமையவுள்ளமையும் விசேட அம்சமாகும். – ada derana

SHARE