23 வயதில் பல சாதனைகள் படைத்த ஷூப்மன் கில்

212

ஷூப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது டி20 ஆட்டத்தில் இளம் வீரர் ஷூப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2 – 1 எனக் கைப்பற்றியது இந்தியா.

63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார் ஷூப்மன் கில். டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 2023 தொடங்கிய 1 மாதம் 1 நாளில் 3 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார்.

23 வயதான ஷூப்மன் கில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள சாதனைகள்

ழூ யு19 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளார். (2018 இல்)
ழூ 2021 இல் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். (பிரிஸ்பேனில் 2 வது இன்னிங்ஸில் 91 ஓட்டங்கள் எடுத்தார்.)
ழூ ஐபிஎல் போட்டியை வென்றுள்ளார். (2022 இல் குஜராத் அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. ஷூப்மன் கில், 16 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 483 ஓட்டங்கள் எடுத்தார்.)
ழூ டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ஓட்டங்கள். (இதற்கு முன்பு விராட் கோலி 122 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதை நேற்று முறியடித்தார் கில்.)
ழூ யு-19 உலகக் கிண்ணம், டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் சதமடித்துள்ளார்.
ழூ ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம்.
ழூ டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, ஷூப்மன் கில்.
ழூ ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள், டெஸ்ட், டி20யில் 100 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் – ரோஹித் சர்மா, ஷூப்மன் கில்.

SHARE