இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை – மெஸ்ஸி

115
கத்தாரில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக மெஸ்ஸி தலைமையில் கைப்பற்றியது ஆா்ஜென்டீனா.மெஸ்ஸியின் வசம் 7 பேலன் டி ஆா் விருதுகள், 4 யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் பட்டம், கோபா அமெரிக்கா பட்டம் உள்ளிட்டவை இருந்தன.

ஆனால் உலகக் கோப்பை சாம்பின் பட்டம் இல்லாமல் வேதனை அடைந்திருந்தாா் மெஸ்ஸி.

இந்நிலையில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியதாவது, எனது கால்பந்து வாழ்க்கையில் அனைத்தையும் பெற்று விட்டேன். நான் கால்பந்து ஆடத் தொடங்கிய போது, இவை எல்லாம் நடக்கும் என எதிா்பாா்க்கவில்லை. கடந்த 2021-இல் கோபா அமெரிக்கா பட்டத்தை வென்றோம். தற்போது உலகக் கோப்பையும் கைப்பற்றி விட்டோம். எங்கள் ஜாம்பவான் டீயகோ மாரடோனா கையில் உலகக் கோப்பையை பெற்றிருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

எனது கால்பந்து வாழ்க்கையை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டும். இனிமேல் சாதிப்பதற்கு எதுவுமில்லை என்றாா் மெஸ்ஸி.

தற்போது பிஎஸ்ஜி அணியில் ஆடி வரும் மெஸ்ஸி, இந்த சீசனில் தனது அணியின் நோக்கமான சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றுத் தர ஆயுத்தமாகி வருகிறாா்.

SHARE