APPLE போன் – புதிய சிறப்பம்சங்கள்

261
ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய iOS 16.5 புதுப்பிப்பில் புதிய விளையாட்டு பக்கத்தை ஆப்பிள் செய்தி செயலியில் சேர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களுக்கான iOS 16.5 புதுப்பிப்பை வியாழக்கிழமை வெளியிட்ட நிலையில், இந்த புதுப்பிப்பில் புதிய விளையாட்டு பக்கத்தை அதன் ஆப்பிள் செய்தி செயலி-யில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விளையாட்டு பக்கத்தில் விளையாட்டு போட்டிகளின் ஸ்கோர்கள், கால அட்டவணை மற்றும் விருப்பான அணிகள் குறித்த கட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வழங்கிய தகவலில், அணிகளின் ஸ்கோர் கார்டு மற்றும் அட்டவணை கார்டுகளை பயனர்கள் தொடும் போது, கூடுதல் தகவல்களை உள்ளடக்கிய சம்பந்தப்பட்ட விளையாட்டு போட்டியின் பிரேத்யேக பக்கத்திற்கு பயனர்களை அழைத்து செல்லும்.
ஆப்பிள் நிறுவனத்தின் iOS 16.5 புதுப்பிப்பில் புதிய வால்பேப்பர்கள், கார்பிளேயில் உள்ள பாட்காஸ்ட்களுக்கான பிழை திருத்தங்கள், பதிலளிக்காத ஸ்பாட்லைட் மற்றும் திரை நேர ஒத்திசைவு ஆகியவற்றில் புதிய புதுப்பிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் புதிய அப்டேட்கள் வழங்கி இருக்கும் அதே நேரத்தில், iPadOS 16.5, macOS Ventura 16.4 மற்றும் watchOS 9.5 ஆகியவற்றிலும் புதிய அப்டேட்டுகளை அறிவித்துள்ளது.
SHARE