ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூன்று பேர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

118
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: யாழில் மூவர் முதலிடம்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் மூன்று பேர் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகின.

இதில் முதல் கிடைத்த தகவல்களின்டி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அதேசமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேர்ந்த மூன்று மாணவர்கள் 183 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் திரேசா பெண்கள் கல்லூரி, வட்டக்கச்சி ம.வி., கண்ணகிபுரம் ம.வி. ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாவர்.

2014 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரேலிய மாவட்ட தமிழ் மொழி மூலத்தில் ஹட்டன் நோர்வூட் தமிழ் வித்தியாலய மாணவர் கிறிஸ்தோபர் கிறிசோன் முதலிடம் பெற்றுள்ளார். குறித்த மாணவன் 188 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இவர் நோர்வூட் இலக்கம் 2 நிவ்வெளி மஸ்கெலியா வீதி நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்தவராவர்.

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடம் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாணவி பத்மராஜ் பிரியலோஷனி 187 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

 

SHARE