நாளை ஒரு நாள் மட்டுமே விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது-ஜெயலலிதா ஜாமீன் மனு

276
Elephant-Pushes-Jayalalitha
ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் ரத்தின கலா, அப்துல் நசீர், ரவிகுமார் ஆகிய 3 பேரில் யாராவது ஒருவர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற உள்ளது. இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.நாளை ஒரு நாள் மட்டுமே விடுமுறை கால கோர்ட்டு கூடுகிறது. அதன்பிறகு தசரா விடுமுறையை தொடர்ந்து அக்டோபர் 6–ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு மீண்டும் செயல்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

news_2007_2_images_newsJaya
29-justice-ratnakala-300
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உள்ளிட்ட 3 மனுக்களை நாளை விசாரிக்கப் போகும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரத்னகலா சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் பிரபலமான வழக்கறிஞராக ஆரம்ப காலத்தில் திகழ்ந்தவர் ஆவார். பெங்களூர் தனி கோர்ட் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் அளிக்கக் கோரியும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை நாளை விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரத்னகலா குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. 1982ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் ரத்னகலா. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர். 1996ம் ஆண்டு மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக உயர்ந்தார். பெங்களூர், ஷிமோகா ஆகிய மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல ஷிமோகா, சிக்மகளூர், பெங்களூர் ஊரக மாவட்டம் ஆகியவற்றில் முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2013ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
TPN NEWS
SHARE