பெண்கள் கபடி: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அரையிறுதிக்கு தகுதி

143

ஆசிய விளையாட்டில் பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. இந்த பிரிவில் வங்காளதேசம், தென்கொரியா அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இன்று தனது 2–வது ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை சந்தித்தது.

இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 45–26 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி நேற்று தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 66–27 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. இது இந்தியாவுக்கு 2–வது வெற்றியாகும். தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

இந்திய அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும்.

SHARE