ஊவா மாகாணசபைத் தேர்தலைவைத்து ஜனாதிபதித்தேர்தலை எடைபோட முடியாது

164

 

ஊவா மாகாணசபைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட அதே நேரம் பணத்திற்காக விலைபோயுள்ள அரசியல்வாதிகளையும் காணமுடிந்தது. அந்த வகையில் பதுளை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் அரைவாசியாக இரு கட்சிகளும் வாக்குகளைப் பெற்றிருந்தன. ஆனால் முன்னைய காலகட்டங்களைப் பார்க்கின்றபொழுது அரசை விடவும் எதிர்க்கட்சிகள் ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. அடுத்ததாக நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித்தேர் தலைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்கள் வெளிநாடுகளினால் முன்னெடுக்கப்படும் அதேநேரம், இந்தியாவும் அதனையே மறைமுகமாக செயற்படுத்திவருகின்றது. இந்தியரசினைப் பொறுத்தவரையில் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து, வடக்குகிழக்கினையும் இணைத்து, தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அத்தோடு வரதராஜப்பெருமாளையும் உட்கொண்டுவருவதே பாரதீய ஜனதாக் கட்சியின் நோக்கமாக இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவினைப் பொறுத்தவரையில் அவரு டைய அரசியல் பாதையில் அனைத்து தடைகளையும் தாண்டி தனது அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றார். தமிழ் மக்களுடைய தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் என்பன நிறைவேற்றப்படாத போதிலும் தமிழர் பிரதேசத்தில் வீதி அபிவிருத்திகள், தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற பல நிர்மாணங்களை அமைப்பதில் அக்கறை காட்டிவருகின்றார். இதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கலாம் என நினைக்கும் அதேநேரம், அவரு டைய மூலதந்திரோபாயங்களில் ஒன்றான இந்தியாவை இணங்க வைத்து, 13வது திருத்தச்சட்டத்தின் ஒரு சில அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார். இந்தியரசினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சி தமிழ் மக்களுக்காக செயற்பட்டு வருகின்றது. அந்த உண்மையும் மஹிந்த ராஜபக்ஷவிற்குத் தெரியும். கடந்த 30 வருட காலங்களை எடுத்துக்கொண்டால் இந்தியாவை நம்பி ஏமாற்றப்பட்டுவரும் நிலையே தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழரசுக்கட்சியினைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களே தமிழரசுக்கட்சியினை வழி நடத்திச்செல்கின்றார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நகர் வும், விடுதலைப்புலிகள் இல்லாத காலகட்டத்தில் அவர்களினுடைய நகர்வும் சற்றுவித்தியாசமாகவே காணப்பட்டுவருகின்றது. ஆனால் தேர்தல் காலகட்டங்களில் மட்டும் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களை தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள் பேச மறந்ததும் கிடையாது. ஊவா மாகாணசபைத் தேர்தலை உற்றுநோக்குவோமாகவிருந்தால், ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி என்பது பாரியளவில் காணப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இத்தேர்தல் தொடர்பாக பார்க்கின்றபொழுது,
ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்! தொகுதி ரீதியாக

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்
பரணகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 19,127 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சி – 18,930, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2, 545, ஜனநாயகக் கட்சி – 556, தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு 307.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 44,705, செல்லுபடியானவை 42,682, நிராகரிக்கப்பட்டவை 2,023.

அப்புத்தளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 21,637 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சி – 19,297, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 1,261.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 46,305, செல்லுபடியானவை 43,609, நிராகரிக்கப்பட்டவை 2,696.

பதுளை தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி – 21,099 வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,001, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2,271, ஜனநா யகக் கட்சி – 199, தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு 336.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 40,414
செல்லுபடியானவை 39,070, நிராகரிக்கப்பட்டவை 1,344.

வெலிமடை தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி – 23,046 வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22,311, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2,485.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 53,481
செல்லுபடியானவை 51,387, நிராகரிக்கப்பட்டவை – 2,094.

மகியங்கனை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 32,863, ஐக்கிய தேசிய கட்சி 25,656, மக்கள் விடுதலை முன்னணி 3,976.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 67,346
செல்லுபடியானவை 64,897, நிராகரிக்கப்பட்டவை – 2,449.

வியலுவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17,650, ஐக்கிய தேசிய கட்சி 14,695, மக்கள் விடுதலை முன்னணி 958.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 35,999
செல்லுபடியானவை 33,965, நிராகரிக்கப்பட்டவை – 2,034.

பசறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23,188, ஐக்கிய தேசிய கட்சி 16,426, மக்கள் விடுதலை முன்னணி 800.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 44,050
செல்லுபடியானவை 41,267, நிராகரிக்கப்பட்டவை – 2,783.
ஹாலி – எல தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி – 23,900 வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 21,104, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1,942.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 50,451
செல்லுபடியானவை 47,705, நிராகரிக்கப்பட்டவை – 2,746.

பண்டாரவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 27,365, ஐக்கிய தேசிய கட்சி 27,085, மக்கள் விடுதலை முன்னணி 2,300.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 60,540
செல்லுபடியானவை 57,850, நிராகரிக்கப்பட்டவை – 2,690.

தபால் மூல வாக்களிப்பு முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,810, ஐக்கிய தேசிய கட்சி 7,274, மக்கள் விடுதலை முன்னணி 2,087.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 19,478
செல்லுபடியானவை 18,939, நிராகரிக்கப்பட்டவை – 539.

பதுளை மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 209056 – ஆசனங்கள் -09.

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 197708 ஆசனங்கள் -08.

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 20625. ஆசனங்கள் -01.

மொனராகலை மாவட்ட தேர்தல் முடிவுகள்
மொனராகலை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 44,921, ஐக்கிய தேசிய கட்சி 22,456, மக்கள் விடுதலை முன்னணி 3,293.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 76,586
செல்லுபடியானவை 72,173, நிராகரிக்கப்பட்டவை – 4,413.

பிபிலை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 33,307 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சி – 16,229, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 2,967.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 57,208
செல்லுபடியானவை 54,072, நிராகரிக்கப்பட்டவை – 3,136.

வெல்லவாய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 56,990 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சி – 35,580, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 8,704.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 110,143, செல்லுபடியானவை -105,145, நிராகரிக்கப்பட்டவை – 4998.

தபால் மூல வாக்களிப்பு முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,632 வாக்குகள், ஐக்கிய தேசியக் கட்சி – 2,800, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 1,001.

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 10,306
செல்லுபடியானவை -10,036, நிராகரிக்கப்பட்டவை – 324.

மொனராகலை மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 140,850 – ஆசனங்கள் -08, ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 77,065 ஆசனங்கள் -05, மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 15965 ஆசனங்கள் -01.
36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு.மு, மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் எவ்வித போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசிய கட்சி 16 ஆசனங்களையும், ஜனநா யக கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. 34 ஆசனங்களுடன் வடமேல் மாகாணத்தில் ஐ.ம.சு.மு, வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கியதேசியக் கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. இதேவேளை, மாலை 4 மணியுடன் நிறைவடைந்த வாக்களிப்பு தினமான சனிக்கிழமை மட்டும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் 91 பதிவாகியுள்ளன என்று தேர்தல் கன்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. இதில், வன்முறை சம்பவங்கள் 10, சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் 38 மற்றும் வாக்காளர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் அந்த வலையமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் 77 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் கன்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

ஏனைய தேர்தல் காலகட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளைப்போல இம்முறை அதிகளவிலான வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. தமிழினத்திற்கு எதிரான போராட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அடாவடித்தனமான தேர்தல் நடவடிக்கையினால் வெற்றி பெற்றதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடந்து முடிந்த இத்தேர்தலிலும் கூட வாக்குமோசடிகள் இடம்பெற்றிருந்ததாக சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார். உண்மையில் பார்க்கின்றபொழுது சரத்பொன்சேகா, ரணில் இவர்கள் இருவரைவிடவும் மஹிந்த ராஜபக்ஷவின் சேவை அளப்பரியது.

ருNPயின் ஆட்சியானது தமிழ்மக்களுக்கு உகந்ததல்ல என்று பிரபல்யமான ஆய்வாளர் ஒருவர் கருத்துத்தெரிவித்திருந்ததுடன் மட்டுமல்லாது விடுதலைப்புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், ரணில் ஒரு கெட்ட நரி எனத்தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்கின்றபொழுது ஊவா மாகா ணசபைத் தேர்தலில் வென்ற மஹிந்த அவர்கள் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெறுவாரென அக் கட்சியிலுள்ளவர்கள் கனவுகாண்பது வழமையானதொன்றே. ஆனாலும் உலக அரசியலைப்பொறுத்தவரையில் மஹிந்தவின் அரசை கவிழ்த்து ருNP அரசினை உருவாக்குவதே அவர்களின் குறிக்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

நெற்றிப்பொறியன்

SHARE