இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை – மகிந்தவின் கருத்த அமெரிக்க நிராகரித்தது

152

usaஇலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த தகவல்களில் உண்மையில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் நியூயோர்க்கில் வைத்து சந்தித்திருந்தார்.
எனினும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் கிடையாது என்பதனையே ஜோன் கெரி, ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார் என ஜென் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணிக்கொள்ளவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அனைத்து இன சமூகங்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய அமைதியானதும் சுபீட்சமானதுமான பின்னணியை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதை தான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது உணர்ந்ததாக அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளதாவது.
இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரு விடயம் மாத்திரம் சரியானது. வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றமெதுவும் இல்லை என்ற நோக்கத்தை தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடமபெற்றது. நிச்சயமாக  இலங்கை தொடர்பான கொள்கையில் தளர்ச்சியேற்படவுமில்லை.
இலங்கையுடனான எமது உறவு முழுமையாக வளர்ச்சி காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், இலங்கை தனது பல தரப்பட்ட இன மத குழுக்களிற்க்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்தாலே சாத்தியமாகும்.
இதன் காரணமாகவே இலங்கை தொடாந்தும் யுத்தத்தில் ஈடுபட்டிராத நாடு என்பதை காண்பிக்கும விதத்திலான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கெரி வலியுறுத்தினார்.

SHARE