2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடும் சிங்கள தேசம் ஆயுதமுறையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்துகின்றது.

131

 

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் நகல் வரைபு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

france-thamilar-640x176

சிறிலங்கா ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பு நடவடிக்கை, 2009 ஆம் ஆண்டு மாபெரும் இனவழிப்பாக உச்சம் பெற்றது. இலட்சக்கணக்கான மனிதவுயிர்கள் காவுகொள்ளப்பட்டும், பல ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாக்கப்பட்டும், பல ஆயிரமாண்டு காலமாக தங்கள் சொந்த தாய் நிலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வேரோடு பிடுங்கி வீசியெறியப்பட்டார்கள்.

மக்களின் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் தலைமையேற்றுப் போராடிய போரளிகள் அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். வல்லாதிக்க சக்திகள் சிங்களத்துக்குத் துணை நின்றதாலும், யுத்த நெறிகளுக்குப் புறம்பான கபடவழிமுறைகளைக் கையாண்டும் எமது உரிமைக்கான ஆயுத வழிமுறையிலான போராட்டம் வலுக்கட்டாயமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் காலச்சூழலில், சனநாயக வழிமுறையில் எமது போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியிருக்கவில்லை. தமிழக உறவுகளும் உலகத்தமிழர்களும் , மனிதநேயமிக்க பல்லின மக்களும்,அமைப்புகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியராளர்களும் என எமது நீதிக்கான போராட்டத்தின் வலிமைமிக்க சக்தியாக எம்மோடு இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.இதன் பயனாக சிங்கள அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு மற்றும் மனித குலத்துக்கு எதிரான போர்குற்றங்கள் குறித்த மறுக்கமுடியாத தெட்டத்தெளிவான ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உள்ளக விசாரணை குறித்த கோரிக்கைகளும் சர்வதேச மட்டத்திலிருந்து எழுந்தன. ஆயினும் சிறிலங்கா அரசு இந்தக் கோரிக்கைகளை தொடர்ச்சியாக உதாசீனம் செய்துவருவதோடு தமிழின அழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.

தமிழர் தாயகப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராயந்து, மனிதவுரிமைப் பேரவை ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் சர்வதேச விசாரணையினைத் தவிர வேறுழியில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார். பிரித்தானியப் பிரதமர் அவர்களும் இதே கருத்தினை வலியுறுத்தியிருந்தார்.
சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என ஐ.நா மனிவுரிமைகள் ஆணையாளர் இப்போதும் வலியுறுத்தி வருவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
ஜேர்மனியில் பிரேமன் நகரில் கூடிய மக்கள் தீர்பாயம் அறிவித்த தீர்ப்பிலும், இலங்கைத்தீவில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை உறுதிசெய்திருந்தது.

சர்வேதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டுமென, தென் ஆபிரிக்க பேராயரும் மனித உரிமை ஆர்வலருமான Desmond Tutu ஆண்டகையின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச அரங்கில் ஏற்பட்ட நம்பிக்கையளிக்கக்கூடிய இந்த மாற்றங்கள், முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் கனதியான காத்திரமான தீர்மானமாக அமையும் என்ற நம்பிக்கையினை தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தியிருந்தது.இந்தத் தீர்மானம் சிறிலங்கா அரசுக்கு எதிரான கடும்தொனியுடன் கூடியதாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.

ஆயினும் தமிழர்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பினைக்கூட ஈடுசெய்யாத இந்த்த தீர்மானத்தால், சர்வதேசத்தினால் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாகவே தழிழர்களாகிய நாம் உணர்கின்றோம்.
இத்தீர்மான நகல் வரைபானது, தமிழர்களின் அரசியல் பிரச்சனையை, சிறுபான்மை மதப்பிரிவினருக்கு எதிரான வன்முறை பிரச்சனையாக சிறுமைப்படுத்த முயல்கின்றது. ‘பயங்கர வாதத்துக்கு’ எதிரான போரை எதிர் கொண்டதாக சிறிலங்கா அரசுக்கு சான்றிதழையும் வழங்கவும் முற்படுகின்றது.இவ்வாறான சர்வதேச நிலைப்பாடுகள் பயங்கரவாத நோக்கத்தோடு செயற்படும் சிறிலங்கா அரசை பலப்படுத்தவும் உற்சாகமடையவுமே செய்யும்.

அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை வழங்காமல், இலங்கைத்தீவில் உண்மையான அமைதியையும் சமாதானத்தையும் ஒருபோதும் கொண்டுவர முடியாது என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து சனநாயக முறையினூடாக எமக்கான நிரந்தர தீர்வினை எட்டும் முயற்சிகளில் நாம் நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றோம். சர்வதேச சமூகமும் தனது தார்மீக ஆதரவினை எமக்கு வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். சனநாக வாய்ப்புகள் தொடரச்சியாக மறுக்கப்படும் போதே அவநம்பிக்கை கொண்ட மக்கள் வன்முறை வழிமுறைகளை நாடுகின்றார்கள் என்பதை சர்வதேச நாடுகளும் பொறுப்புணர்வோடும் கரிசனையோடும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடும் சிங்கள தேசம் ஆயுதமுறையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்துகின்றது. இராணுவத்தின் இருப்புக்கும் அதன் விரிவாக்கத்துக்குமென தமிழரின் சொந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டடு வருகின்றன. நிலமிழந்த மக்கள் நிர்கதியாக அலைக்கழிக்கப் படுகின்றனர். சிங்கள இன விகிதாசாரத்தை அதிகரிப்பதற்காக பிரத்தியேக அரசகொடுப்பனவுகள் படையினருக்கு வழங்கப்படுகின்றன. இராணுவத்திற்கு தமிழ் பெண்கள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

நீண்டகால திட்டமிட்ட அடிப்படையில் இலங்கைத்தீவில் இருந்து முற்று முழுதாக இல்லாதொழிக்கும் வேலைகளையே சிங்கள அரசு செய்து வருகின்றது. தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக சிங்கள தேசத்திடம் உள்ள ஒரே தீர்வு அது மடடுமே! சர்வதேச சமூகத்தால் வழங்கப்படும் கால அவகாசத்தையும் சிங்கள அரசு தமிழின அழிப்புக்கே பயன்படுத்திக் கொள்ளும்.

இந் நிலைகமைளை உற்று நோக்கி, ஐ.நா மனிதவுரிமைகள் அவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம், மீள்பரிசீலினைக்கு உட்படுத்தப்பட்டு, மிகவும் காத்திரமானதாக இருக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தமிழர்களுக்கான நீதியும், சுதந்திரமான வாழ்வுரிமை கிடைக்கும் வரை, “நாளை தமிழீழத்தில் சிந்திப்போம்” என்ற சிந்தனையுடன் எமது போராட்டம் தொடரும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஊடகப்பிரிவு: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

SHARE