தமிழ் மக்கள்மீது இடம்பெற்ற இன அழிப்பின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலை

135

முள்ளிவாய்க்காலிலும், வன்னியின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற இறுதிப்போரில் மட்டும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலும் போயுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் 40000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில், படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களும், மனத குலத்திற்கு எதிராக குற்றங்கள் சிலவும் போர்க்குற்றமாக அமையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர்க்குற்ற விசாரணையை சுயாதீனமாகவும், அனைத்துலக ரீதியாகவும் நடத்துவதற்கான அழுங்களைக் கொடுக்கும் அதேவேளை, ஈழத்தில் இடம்பெற்றது இனவழிப்பு என்பதை பன்னாட்டு சமூகம் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இதற்கு அனைவரும் ஒற்றுமையாய் ஒன்றிணைந்து, எத்திசையில் இருந்தாலும், ஒத்திசைவாய் செயற்படுவது மிக முக்கியமான விடயமாகும்.

 

SHARE