கொக்கிளாயில் மீன்பிடி அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்தியவர்களை கைது செய்ய விசாரணை

166
 SAM_3831_CI
முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட மீன்பிடி திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு தடையேற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கொக்கிளாய் கடலில் நேற்று தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இவர்களை கைது செய்யவற்காக சென்ற மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு கொக்கிளாய் பிரதேச மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன் போது ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அதனை கட்டுப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து தமது கடமைகளுக்கு தடையேற்படுத்தியதாக மீன்பிடி திணைக்களத்தின் முல்லைத்தீவுக்கான உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

 

SHARE