பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: முஷரப் வாய்க்கொழுப்பு

124
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கருத்து கூறிய அவர், தற்போது பாகிஸ்தானில் நிலவி வரும் அரசு நிர்வாகம், தேர்தல் முறை, அரசியல் சூழ்நிலை போன்ற எதுவுமே தனக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்.நாட்டின் எதிர்காலம் கருதி இவை அனைத்துமே மாற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய முஷரப், மீண்டும் தேர்தல் நடத்தி, புதிய அரசை தேர்வு செய்ய அனைத்து கட்சிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லைப் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டிய அவர், எல்லைப்பகுதியில் இந்தியா தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பாகிஸ்தான் ராணுவத்தின் பொறுமையை சோதிப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

SHARE