லிபியாவில் இங்கிலாந்து பிணைக் கைதியை விடுவித்த தீவிரவாதிகள்

125

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் போலம். இவர் லிபியாவில் பெங்காசியில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் தனது மனைவி சியோயினுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்க்கெட் சென்ற அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை பிணைக் கைதியாக பிடித்த தீவிரவாதிகள் அவர் குறித்த வீடியோவை கடந்த ஆகஸ்டு 28–ந் திகதி வெளியிட்டனர். அதில் அவர் பிரதமர் டேவிட் கேமரூனிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் பிணைக் கைதி டேவிட் போலம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு அவர் பணியாற்றிய பள்ளி பிணைத் தொகை வழங்கி அவரை மீட்டதாக தெரிகிறது. நலமுடன் இருக்கும் அவர் விரைவில் இங்கிலாந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE