ஐ.நா. மனித உரிமைகள் சபை கூறும் செய்தி என்ன?

155

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 27வது கூட்டத் தொடர், புதிய மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சியாட் றசாட் அல் ஹுசைனின் பங்களிப்புடன் நடந்து முடிந்தது.

ina

வழமைபோல், பல நாடுகளில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆழமாக ஆரயப்பட்டதுடன், அதற்கான கண்டன உரைகளுடன், கண்டனப் பிரேரணைகளும், மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் சிரியா, ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், சிறிலங்கா, சூடான், தென் சூடான், உக்ரைன், கொங்கோ ஜனநாயக குடியரசு, லீபியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரிய) போன்ற நாடுகள் முக்கியமானவை. இந்நாடுகளை அங்கத்துவ நாடுகளும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் அந்நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிகாட்டி கண்டித்தன.

27வது கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வை, சபையின் தலைவர் ஆரம்பித்து வைத்து, புதிய மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சியாட் றசாட் அல் ஹுசைனை உரையாற்றுமாறு வேண்டினார்.

இவர் தனது கன்னிப் பேச்சை ஆரம்பித்த பொழுது, முதல் தடவையாக இச்சபையில் கலந்து கொள்வோர், இருக்கை இல்லாத நிலையிலும் நின்று உரையை கேட்பதற்கு ஐ.நா.பாதுகாப்பு பிரிவினால் அனுமதிக்கப்பட்டனர்.

புதிய ஆணையாளர் உரை

இளவரசர் ஹுசைனின் உரை பற்றி மிகவும் சுருக்கமாக கூறுவதனால், நிச்சயம், இவரினால் முடிந்தளவு, பாதிப்புக்குள்ளன மக்களுக்கு, நீதி நியாயத்தையும், மனித உரிமையை மீறிய யாவர்க்கும் சரியான படிப்பினையும் கொடுப்பதற்கு முனைவார் என்பது தெளிவாகியிருந்தது.

உரையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை, தனது அனுபவம் விசேடமாக முன்னைய யூகோசிலாவியாவில் தான் ஐ.நா. பாதுகாப்பு படையில் சேவை செய்த காலத்தில் அனுபவப்பட்டவை, அறிந்தவை, புரிந்தவை போன்றவற்றை கூறியதுடன், ஓர் போரினால் ஏற்படும் விபரீதங்கள், பாதிப்புக்கள் பற்றியும், இவற்றை முன்னின்று தவறான முறையில் மக்களை, சமுதாயத்தை, பிராந்தியங்களை, நாடுகளை வழி நடத்துவோர் தண்டனைகளிலிருந்து தப்பிக்கொள்வதானால், விபரீதங்கள் உலகில் தொடர்கின்றது எனவும் கூறினார்.

ஹுசைன் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்விடயத்தில் புனித பாப்பண்டவர் பிரான்ஸிசின் கருந்தான, “ஒன்றுபட்ட நேர்மையான புத்திசாலித்தனமானவர்கள் துணிவுடன் வழிநடத்த முன்வர வேண்டும்” என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென கூறியிருந்தார்.

நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு

முலும் உரையாற்றுகையில், இவ் வகையில் தான் தனது முன்னாள் ஆணையாளர்களின் கருத்தை, செயற்பாட்டையே தொடர விருப்பதாகவும், அவர்கள் யாவரையும் தனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியுமெனவும், அவர்கள் மிகவும் துணிந்த முதன்மை வாய்ந்த திறமைவாய்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் என்றும்,

அவர்கள் அநீதி, அநியாயங்கள் கண்டு அமைதியாக இருந்தவர்கள் இல்லையென்றும், தனக்கு முன்னர் பதவி வகித்த ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையை தான் சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் சேவை செய்தவேளைகளில் இவருடன் மிக நெருக்கமாக கடமையாற்றியதாகவும், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் உருவாக்கத்திற்கு அவரது சேவை என்பது மிகவும் பாராட்டிற்குரியது எனவும் கூறினார்.

நவநீதம்பிள்ளை பற்றி மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபை பெற்ற ஓர் அதி சிரேஸ்ட திறமை வாய்ந்த உத்தியோகத்தர் எனவும், இவர் தனது கடமை கண்ணியம் காரணமாக, சில அரசாங்கங்களை தன் மீது கோபம் கொள்ள வைத்துள்ளது தவிர்க்க முடியாததொன்று எனவும் கூறினார்.

இவர் தனது கன்னி உரையில் குறிப்பிட்டு உரையாற்றிய நாடுகள் பின்வருமாறு – சிரியா, ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீனம், லீபியா, உக்ரைன், மத்திய ஆபிரிக்க குடியரசு, தென் சூடான், கொங்கோ ஜனநாயக குடியரசு, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரிய), சிறிலங்கா, ஆவுஸ்திரேலியா ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா விடயம்

இவர் சிறிலங்க பற்றி உரையாற்றுகையில், “இவ் சபையின் அங்கீகரத்துடன், எமது காரியலாயம் தற்பொழுது முன்னெடுத்து கொண்டிருக்கும் சிறிலங்கா மீதான விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்கிறேன்.

நீதி, நியாயம், அரசியல் உரிமை என்ற அடிப்படையில் இவ் விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். சிறிலங்காவில் மனித உரிமைக்காக செயற்படும் சமுதயம் மீதான தற்போதைய தாக்குதல்கள், பயமுறுத்தல்களுடன், சாட்சியங்கள் கூற முன்வந்தவர்கள் மீதான மிரட்டல்களை அறிந்து மிகவும் விழிப்படைந்துள்ளேன்.

மிக அண்மையில் அங்கு முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும் அறிந்துள்ளேன்” என மிக சுருக்கமாக கூறியிருந்தார்.

இவர் அவுஸ்திரேலியா பற்றிய தனது உரையில், அரசியல் தஞ்சம் கோரி, கடல் மூலமாக அஆவுஸ்திரேலிய வருவோர் திரும்பி அனுப்புவதன் மூலம், மனித உரிமை மீறல்கள் என்பது சங்கிலி தொடரில் சென்று கொண்டிருப்பதாகவும், திருப்பி அனுப்பபப்படுவோர் அவர்களது நாடுகளில் கைது, சித்திரவதை ஆளாக்கபடுவதாகவும் கூறியிருந்தார்.

புதிய ஆணையாளரது உரையை தொடர்ந்து 27வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் ஆரம்பமாகியது. வழமைபோல் சிறிலங்காவின் பிரதிநிதி, புதிய ஆணையளரின் கருத்திற்கும் மறுப்பு தெரிவிந்திருந்தார்.

இதேவேளை அமெரிக்கா உட்பட ஐரோப்பியா யூனியன் சார்பாக இத்தாலி, பிரித்தானியா போன்ற பல நாடுகள் புதிய ஆணையளரின் உரையை வரவேற்று பாராட்டியும் இருந்தன.

காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழு

ஐ.நா.வின் காணாமல் போனோர் பற்றி பரிசீலிக்கும் குழுவின் அமர்வு, 27வது கூட்டத் தொடர்வேளையிலேயே ஜெனிவாவில் நடைபெற்றது.

இவ் குழுவின் அமர்வில், சிறிலங்காவில் காணமல் போவோர் பற்றிய விடயம் மிக அந்தரங்கமாக ஆராயப்பட்டது. இவ் அமர்வில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு சட்ட மா அதிபர் காரியாலயத்தின் உத்தியோகத்தர் சிலர் ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்தனர்.

இக்குழு சிறிலங்கா பற்றிய விடயங்களை மிகவும் அந்தரங்கமாக அரச பிரதிநிதிகளிடமிருந்து தமது வினாக்களுக்கான பதிலை பெற்றுக் கொண்டனர்.

இவ் விடயம் அந்தரங்கமானது ஆகையால், அங்கு சிறிலங்கா அரச பிரதிநிதிகளிடம் வினாவப்பட்ட கேள்விகளையும், அதற்காக சிறிலங்கா பிரதிநிதிகளினால் கொடுக்கப்பட்ட பதில்களையும் ஐ.நா. செய்தி சேவையினால் வெளியிடப்படவில்லை.

மிக சுருக்கமாக கூறுவதனால், காணாமல் போவோர் விடயத்தில் சிறிலங்கா மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்பதை இக்குழு ஏற்கனவே கூறியுள்ளது.

அடுத்து இவ் கூட்டத்தொடரில் பல நாடுகளும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் சிறிலங்கா விடயத்தில் உரையாற்றியதுடன், சிறிலங்கா பற்றிய சில கூட்டங்களும் ஐ.நா. மண்டபத்தில் நடடைபெற்றன. இவற்றில் சில கூட்டங்கள் வெற்று கதிரைகளுக்கே நடாத்தப்பட்டன.

அவ் கூட்டங்களில் எந்தவொரு சர்வதேச பிரதிநிதியோ அல்லது பிற இனத்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சில தமிழ் இணையத்தளங்களில் இக் கூட்டங்கள் பற்றிய பொய் சொல்லும் செய்திகளும் படங்களும் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

“நத்தை” வேகத்தில் சமாதானம்

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான “றாடோ” என்ற ஆபிரிக்கா அமைப்பின் சார்பாக, “சமாதானத்திற்கான உரிமைகள்” என்ற தலைப்பில், பிரித்தானியாவை சார்ந்த் திருமதி டீயேற்றி மக்கோணால் அவர்கள் உரையாற்றினார்.

இவர் கூறியதாவது, சில நாடுகள் சமாதானத்தை விரும்பவில்லை, பல நாடுகளில் சமாதானம் என்பது ஓர் பேச்சு பொருளாகவே உள்ளது. பொதுவாக உலகில் சமாதானம் என்பது நத்தை வேகத்திலேயே சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கு சிறந்த உதாரணமாக, சிறிலங்காவை சுட்டி காட்டியிருந்தார்.

அவர் தொடர்ந்து கூறியதவாது, சிறிலங்காவை பொறுத்தவரையில், அங்கு 1948ம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர், கடந்த ஆறு தசாப்தங்களாக சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லாது, இரத்தக் களரியுடன் இனப்பிரச்சினை தொடர்கிறது. இதன் காரணமாகவே சிறிலங்கா இன்று ஓர் சர்வதேச விசாரணைக்கு பதில் கூறவேண்டியவர்களாக கணப்படுகிறார்கள்.

இதனை தொடர்ந்து, செப்டம்பர் 18ம் திகதி, “சிறுபான்மை சமயத்தவர்கள், தென் ஆசியாவில் ஆக்கிரமிக்கப்படுகிறார்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கொழும்பிலிருந்து வணபிதா கொட்பிறி யோகராசா வரவழைக்கப்பட்டிருந்தார்.

இவர் தனது உரையில், இலங்கைத் தீவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சைவ சமயத்தவர்கள் எப்படியான அடக்கு ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பல புள்ளி விபரங்கள் சம்பவங்கள் மூலம் விளங்கியிருந்தார். இவரது துணிகரமான இவ் உரையை அங்கு சமூகமளித்திருந்தோர் வரவேற்றிருந்தனர்.

வாய்மூல அறிக்கை

சகலரும் எதிர்பார்த்திருந்த சிறிலங்கா மீதான மனித உரிமை ஆணையாளாரின் வாய்மூல அறிக்கை, கடந்த 25ம் திகதி, உதவி மனித உரிமை ஆணையாளர் திருமதி பாலவியா பான்சியேறியினால் மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ் அறிக்கையின் முன்னேற்படான அறிக்கை கடந்த 22ம் திகதி, ஐ.நா. இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

திருமதி பாலவியா பான்சியேறியினா இவ் அறிக்கையின் சார அம்சத்தை எடுத்துரைக்கும் வேளையில், சிறிலங்காவில் மனித உரிமை ஆர்வலர், ஊடகவியலாளர் மீதான தாக்குதல், புதைகுழிகள், உள்நாட்டு விசாரணை, சிறுபான்மை சமயத்தவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி மனித உரிமை சபையில் விபரிந்திருந்ததோடு, தாம் மீண்டும் சிறிலங்காவை தமது விசாரணகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய சிறிலங்காவின் பிரதிநிதி, திரு ரவிநாத் ஆரியசிங்க, தனது அரசாங்கம் இவ் தீர்மானத்தையே ஏற்காதபொழுது, எப்படியாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியுமென கூறினார்.

இவர் தனது உரையில், இவ் ஐ.நா விசாரணையை சிறிலங்காவின் பாரளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிராகரித்துள்ளதாக சுட்டிகாட்டிய அதேவேளை, வடமாகண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி, ஐ.நா.மனித உரிமையாளர் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறுவெனவும் கூறியிருந்தார்.

ஓர் வெளிநாட்டு கொள்கை விடயத்தில், மாகாண சபை தீர்மானங்களை நிறைவேற்றுவது, சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கு மாறானது எனவும் கூறியிருந்தார்.

சிறிலங்கா தொடர்ந்து தனது உள்நாட்டு விசாரணைகளில், கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டோர்களுக்கு நீதி நியாயம் அரசியல் உரிமை கிடைக்குமெனவும் கூறியிருந்தார்.

நாடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்கள்

இவ் வாய்மூல அறிக்கையை தொடர்ந்து பல நாடுகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும், அறிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர்.

இவற்றில் ஐரோப்பிய யூனியன் சார்பாக இத்தாலி, பிரித்தானியா, மொன்ரனிகிறோ, கனடா போன்ற நாடுகள் ஆதரவாகவும், கியூபா, ராஸ்யா, சீனா, வெனிசுலா போன்ற நாடுகள் எதிராகவும், இதில் இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளின் அறிக்கைகள் நாடுநிலையாகவும் காணப்பட்டன. இவற்றில் இந்தியா 13வது திருத்தச் சட்டத்தின் முக்கியத்தை வலியுறுத்தியிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பல அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அறிக்கைக்கு சார்பாக உரையாற்றியிருந்தனர். இவற்றில், இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த (எம். ஏல் ஏ) கணேசகுமார் அவர்கள் பசுமை தாயாகம் சார்பாகவும், வணபிதா இம்மானுவேல் அடிகளார், லிபரேசன் என்ற பிரித்தானியா அமைப்பு சார்பாகவும், சிறிலங்காவிலிருந்து வருகை தந்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “ஆபிரிக்கா பெண்கள் அமைப்பு” சார்பாகவும் உரையாற்றியிருந்தனர்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszATZKWnsz.html#sthash.RFNn3fZw.dpuf

SHARE