எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்குமாறு ஜே.வி.பி யிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்க உள்ளது.

140
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நிராகரிக்குமாறு ஜே.வி.பி யிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுக்க உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட உள்ளார்.

எனவே ஜே.வி.பி.யின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக ஜே.வி.பி.யிடம் கோரிக்கை விடுக்க உள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்கள், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து விரைவில் பேசவுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முடியாவிட்டால் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடாது பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஜே.வி.பி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE