இங்கிலாந்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்

127

ஆணும், பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் என்றழைக்கப்படும் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களும் திருமணம் என்ற பெயரில் இணைந்து வாழ்கின்றனர்.

ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு பெண் இங்கிலாந்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் கிரேஸ் ஹெல்டர்.

போட்டோ கிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார். அதை தொடர்ந்து திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கினார்.

அதன் பின்னர் டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை சமீபத்தில் அழைத்தார்.

அவர்களுக்கு தடபுடலாக திருமண விருந்து கொடுத்தார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு அவரே முத்தம் கொடுத்து அன்பை பறிமாறி கொண்டார்.

SHARE