போர்க் கப்பல்கள் பாதுகாப்புக்கு ஆளில்லாத நவீன படகுகள்: அமெரிக்கா தயாரித்தது

126

விண்ணில் பறந்து எதிரிகளின் இலக்கை உளவு பார்க்கவும், குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா ஆளில்லாமல் இயங்கும் டிரோன்களை (ஆளில்லா விமானங்களை) தயாரித்துள்ளது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதிகள் மீது குண்டு வீசப்படுகிறது.

அதே போன்று தற்போது கடலில் பாய்ந்து நீந்த கூடிய ஆளில்லா அதிநவீன ரோபோ படகுகளை தயாரித்துள்ளது. இவற்றில் எதிரி கப்பல்களை தாக்கும் திறன் படைத்த ஆயுதங்கள் உள்ளன.

இந்த படகுகள் அமெரிக்காவின் போர்க் கப்பல்களுக்கு பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் தேவைப்படும்போது எதிரிகளின் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது.

தற்போது இதுபோன்ற 13 படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் சோதனை ஓட்டம் சமீபத்தில் வாஷினியாவின் ஜேம்ஸ் ஆற்றில் வெற்றிகரமாக நடந்தது.

இந்த சோதனையை அமெரிக்க கப்பற்படை நடத்தியது. தற்போது 5 படகுகள் மிகப்பெரிய போர்க் கப்பல்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளன. மீதமுள்ள 8 படகுகள் கடலில் ரோந்து சுற்றி வரும். சந்தேகத்துக்கு இடமான அமெரிக்க கடலில் பயணம் செய்யும் கப்பல்களை கண்காணிக்கும்.

இந்த தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்துக்கு ‘நாசா’ அனுப்பிய விண்கலன்களில் இருந்து பெறப்பட்டு படகுகளில் புகுத்தப்பட்டுள்ளது. இப்படகுகள் 11 மீட்டர் நீளம் கொண்டவை.

பொதுவாக அதில் 3 அல்லது 4 பேர் பயணம் செய்ய முடியும். அதில் உள்ள ரோபோ சிஸ்டம் மூலம் ஒரு படகு 20 கப்பல்களை கண்காணிக்கும் வசதி உள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவின் கப்பற்படை அறிவித்துள்ளது.

SHARE