ரஜினி வீட்டில் இருந்து தீபிகாவுக்கு சாப்பாடு சப்ளை 

115
நியூ இயர் பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார் தீபிகா படுகோன். அப்போது அவர் கூறியது:கோச்சடையான் படத்துக்கு பிறகு தமிழ் படம் நடிக்காதது ஏன் என்கிறார்கள். எந்த மொழி படமாக இருந்தாலும் நடிக்க தயார். ஹீரோ யார் என்று பார்த்து நான் நடிப்பதில்லை. அக்கதையில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்த்தே ஒப்புக்கொள்கிறேன். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. இதற்கு முன் ஒரு படத்தில் நடிக்க அவரிடமிருந்து வாய்ப்பு வந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. நான் எப்போது சென்னை வந்தாலும் ரஜினி மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யாவுடன் பேசுவேன். அவர்கள் எனது குடும்பத்தின் அங்கத்தினர்கள் போன்றவர்கள். மும்பைக்கு அவர்கள் வரும்போது என்னை தொடர்புகொண்டு பேசுவார்கள். நான் சென்னை வரும்போதெல்லாம் அவர்கள் வீட்டிலிருந்து எனக்கு சாப்பாடும் வந்துவிடும்.இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்

 

SHARE