யாழ் வரும் மஹிந்த மோட்டார் சைக்கிளும் விற்கவுள்ளார்-ஜனாதிபதி தேர்தலுக்கான அடிக்கல் நாட்டு விழாவாக மகிந்தவின் செயநற்பாடா?

155

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.

ஆண் அரச உத்தியோகத்தர்களுக்கு 50ஆயிரம் ரூபாவுக்கும், பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு 45 ஆயிரம் ரூபாவுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

அதற்காக ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் கொண்டு வரப்பட்டு காட்சிப்டுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் முழுவதும் வந்தடைந்து விட்டது.

எனினும் பெண்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் தற்பொழுது யாழ்.துரையப்பாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

 

SHARE