நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் கணவர் இயக்கத்தில் நடிக்க போகிறாரா குஷ்பு

136

பூஜை படத்துக்கு பிறகு சுந்தர் .சி இயக்கத்தில் ஆம்பள என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தற்போது இந்த ‘ஆம்பள’ டீம் படப்பிடிப்பிற்காக ஊட்டியில் முகாமிட்டுள்ளது. தன் கணவர் சுந்தர்.சியுடன் குஷ்புவும் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இதனால் இப்படத்தில் அவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் சுந்தர்.சி.

 

SHARE