உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடு உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுகர்கள்

139
தமிழர்கள் தமது ஆட்சியை நிறுவ இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும்: உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் கடந்த 4ம், 5ம் திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுகர்கள், கல்வித் துறை சார் பேராசிரியாகள் அடங்கலாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வல் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வுகள் அனைத்தும் ஹம் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமாகின.

இம் மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பேராசிரியர்கள், தமிழ்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜேர்மனி நாட்டின் மாகாண மட்ட அரசியல் பிரமுகர் ஒருவரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், பழைமையான பத்திரிகைகள் இந்த நிகழ்வின் போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அனைவரும் அவற்றினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தினை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல உரைகளும் இடம்பெற்றிருந்தன. இறுதி நிகழ்வின் போது, புத்தகமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதேவேளை, மாநாட்டின்போது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினால் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.

அவை பின்வருமாறு,

1.இலங்கைத் தமிழர் தம் சொந்த தாயகத்தில் வாழுவதற்கும் ஆளுவதற்கும் தமிழ் மொழி, கலை, கலாச்சாரங்கள் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் வாழும் நிலம் தமிழர் நிலமாக இருக்க வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சியை தமிழர் நிலத்தில் நிறுவுவதற்கு சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும். என்பதுடன் அவர்களின் போராட்டங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் பூரண உரிமையுடன் வாழ இம்மாநாடு தனது பூரண ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டுமென தீர்மானம் மேற்கொள்கிறது..

2. உலகலாவும் வாழுகின்ற மக்களுக்கென பொதுத் தமிழர் வங்கி ஒன்றின ஆரம்பிப்பதற்கு இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.

3. புலம்பெயர் தமிழர்களிடையே பொதுவான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என இம்மாநாடு அறை கூவல்விடுக்கின்றது.

4. உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் நாடுகளில், தமிழர் குடியேற்றத்திற்கான நினைவுத் தூபி நிறுவப்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5.தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழர் கலை, கலாச்சார பண்பாட், விழுமியங்களை பிரதிபலிக்கும் ஊர்தி, ஊர்வலம், தமிழர் மரபு மாதமான தை மாதத்தில் நடத்தப்பட வேண்மென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.

6.தமிழர் மரபு விளையாட்டுக்களை வளர்க்கவும், தமிழர் மரபு அடையாளங்களை சேகரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.

7. புலம்பெயர் தமிழர் மத்தியில் தமிழ்ப் பணி செய்யும் தமிழ் புரவலர்களை அடையாளம் கண்டு, தமிழர் மத்தியில் புதிய ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ் சமுதாயத்திற்கு சிறப்புச் செய்யும் தமிழர்களை அடையாளம் கண்டு, தமிழர் விருது வழா ஒன்றை நடாத்தி அவர்களைக் கௌரவம் செய்ய வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கின்றது.

 

SHARE