“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்

135
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை மாநில அரசு கட்டுப்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார்.

“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமேயானால், அதைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், கட்டுப்படுத்துவார்கள்.அது அவர்களுடைய கடமை.

அவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். எதிர்பார்ப்பதில் தவறில்லை” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 

SHARE