எல்லையில் மோதல்: தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை

105
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த 1-ந்திகதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்தியா தகுந்த பதிலடி தந்து வருகிறது.

ஆனால் இந்தியாதான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன், இந்த பிரச்சினையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் சரியான விதத்தில் செயல்படவில்லை என அங்குள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய பாதுகாப்பு குழுவை கூட்டி அவசர ஆலோசனை நடத்துகிறார். இதில் ராணுவம், உள்துறை, நிதி, தகவல் துறை மந்திரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தளபதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

SHARE