சமந்தா படத்தில் சார்மி குத்தாட்டம் 

123
சென்னை: சமந்தா படத்தில் குத்து பாடலுக்கு ஆடுகிறார் சார்மி.தமன்னா நடித்த ‘ஆகடு தெலுங்கு படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் ஸ்ருதி ஹாசன். இதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ருசிகண்ட ஸ்ருதி அடுத்து இந்தி படமொன்றிலும் குத்துபாடலுக்கு நடனம் ஆடி கைநிறைய சம்பளம் வாங்கினார். இதையறிந்த சில ஹீரோயின்கள் குத்து பாடல் ஆடுவதற்கு தயாராயினர். தமிழில் விக்ரம், சமந்தா நடிக்கும் படம் ‘10 எண்ணறதுக்குள்ள. விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் வரும் குத்து பாடல் காட்சி ஒன்றுக்கு நடனம் ஆட ஹீரோயின் அந்தஸ்தில் நடிகை தேவைப்பட்டார். பல நடிகைகளின் பெயரை பரிசீலித்த இயக்குனர், சார்மி ஆடினால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்ததுபோல் இருக்கும் என்று எண்ணினார். ஏற்கனவே விக்ரம், சமந்தா கோலிவுட்டைபோலவே டோலிவுட்டிலும் பிரபலமாக உள்ளனர். இவர்களுடன் சார்மியும் சேர்ந்தால் பிஸ்னசுக்கு ஓ.கே என முடிவு செய்தார். இதையடுத்து சார்மி குத்து பாடலுக்கு ஆட அழைக்கப்பட்டிருக்கிறார். 9 நிமிடம் ஓடக்கூடிய இப்பாடல் காட்சி புனேயில் படமாகிறது

 

SHARE