ஈழப்போரின் இறுதிகட்டத்தில் அதிநவீன குண்டுகளை பிரபாகரன் பாவிக்காதது ஏன்?

 

 

இலங்கையரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய படைநகர்வென்றை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் 2009 காலப்பகுதியில் மும்முனைத்திறப்புடன் வலிந்த தாக்குதலாக நடத்தியிருந்தது. மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் நிறைவுபெற்றது. ஆனால் ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் அரசாங்கத்துடனும் சமரப் பேச்சுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.நா சபை செயலாளர் நாயகம் யசூசி அக்காசி, எரிக் சொல்ஹெய்ம் உட்பட பல்வேறு நாடுகளின் ராஜதந்திரிகள் இலங்கையின் நடைபெற்றுக்கொண்டிருந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். காரணம் தற்கொலை தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மட்டுமல்ல உலக அரங்கிலும் எவருமே இத்தகைய செயற்பாடுகளைச் செய்யக்கூடாது என்ற முக்கிய நோக்கமே.

3717712525_2686b11c7f 3718352554_ecca8d780c

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லேடன் இரட்டைக் கோபு ரம் மீது தாக்குதல் நடத்தியபோதே அதாவது தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள், அமைப்புக்கள் அனைத்தையுமே ஓரம்கட்ட, தடைசெய்ய அமெரிக்கா முழுமுயற்சி எடுத்தது. அதனொரு கட்டமாகவே கடல், வான், தரை, தற்கொலைப்படை என வளர்ந்து வந்திருந்த விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு மற்றும் பிரபாகரனின் தலைமைத்துவம் இலங்கை நாட்டுக்குள் இருக்கக்கூடாதென்று ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக தீர்மானம் எடுத்துக்கொண்டதன் விளைவே இவர்களது போராட்டம் ஓரம்கட்டப்பட்டதற்கு பிரதான காரணமாகும்.

இதன் காரணத்தால் தமி ழீழ விடுதலைப்புலிகள் பன்னாட்டுப் படைகளுடனும் சண்டையிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பல நாடுகளை யும் எதிர்த்துப் போரிட்டார்கள். இப்போரின் போது அறுபதினாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவப் படையினர் கொல்லப்பட்டதுடன் இருபதாயிரத்துக்கு மேற்பட்டோர் அங்கவீனர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சதந்திரதினத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெளிவாக ஒன்றைச் சொல்லியிருந்தார். அதாவது நடந்து முடிந்த பிரச்சினைகள் நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். உயிரிழப்புக்களை தவிர ஏனைய அனைத்தும் கட்டியெழுப்பப்படும். இன்னும் ஒரு அபாயகரமான யுத்தம் ;வேண்டாம். நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற அடிப்படையில் சுதந்திரமான இலங்கைக்குள் வாழவேண்டும் என்றிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளிப்படையாக இலங்கைவாழ் மக்களுக்கு சாதகமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும்கூட புத்தபிக்குகள் ஒருபோதும் தமிழர்களுக்கான தீர்வினை உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு விடமாட்டார்கள். அவ்வாறு விட்டுக்கொடுத்த வரலாறுகளுமில்லை.

ராஜதந்திர ரீதியி லாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான பன்னாட்டுப் படைகளின் யுத்த அணுகுமுறைகள் விடுதலைப்புலிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தாலும் கூட உலக நாடுகள் அதுவும் குறிப்பாக வல்லரசு நாடுகள் இலங்கை மீது போர் தொடுத்தது என்றால் பிரபாகரனின் போராட்டத்தின் வலிமையை நாம் அறிந்து கொள்ளலாம். கருணா பிரபாகரனை விட்டுப் பிரிந்த பின்னர் ஆயுதக்குழுக்களின் அதிகாரங்கள் கையோங்கி நின்றன. அரசாங்கம் தமிழ்மக்களையே தமிழ்மக்கள் மீது ஏவிவிட்டு தமிழ்மக்களுக்குள்ளேயே பிரிவினையை ஏற்பட்டு தம்மினமே தம்மினத்தைச் சுட்டுக்கொல்லும் வரை வேடிக்கை பார்த்துப் கொண்டிருந்தது. இவ்வாறாக தமிழ்மக்களுடைய பிரச்சினை இருந்து வந்தததன் காரண மாகவே பிரபாகரன் ஒரு முடிவுக்கு வந்தார். அனைத்துப் போராளிகளை யும் இறுதிநேரத்தில் வரவழைத்து எமது தாயகம் காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டது. நாம் இன்று பல நாடுகளோடு போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் சோர்வடைந்து போகக்கூடாது. ஷஷநான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது|| என்று பேசியிருந்தார்.

விடுதலைப்புலிகளின் அதிநவீன ஆயுதம்

30_001

விடுதலைப்புலிகள் அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்தும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஏன் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்று பார்க்கும்போது, அவ்வாயுதங்களை மட்டும் பயன்படுத்தியிருந்தால் வன்னிப்பெருநிலப்பரப்பு முற்றாக அழிந்துவிடும் என்ற காரணத்தால் தான் விடுதலைப்புலிகள் பயன்படுத்தவில்லை. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள இக்குண்டுகளைவிட மேலதிகமாக பல இருந்ததாக புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இக்குண்டுகளைப் பயன்படுதியிருந்தால் உண்மையில் ஒவ்வொரு மாவட்டத்தையும் இலகுவாக கைப்பற்றியிருக்க முடியும். ஆனால் இவ்வாறான குண்டுகளைப் பிரபாகரன் பயன்படுத்தியிருந்தால் முன்பைவிட சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு இன்னமும் உள்ளாகியிருக்க வேண்டும். இராணுவத்தினரிடமோ அல்லது அயல்நாடுகளிடமோ இவ்வாறான இராட்சத குண்டுக் இருந்திருக்கவில்லை. இறுதிக்கட்டத்தின் போது இவற்றை இயக்கக்கூடிய ஆளணிவளமும் இருந்திருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அக்காலகட்டத்தின்போது விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் 8 சர்வதேச கடற்பரப்பில் நிர்மூலமாக்கப்பட்டிருந்தமை நாம றிந்ததே. அவற்றில் இந்தியாவிலிருந்து வந்த கப்பல் ஆயுதக்கப்பல் என்று அரசதரப்பு கூறியிருந்தாலும் அதில் மருத்துவ, அவசர தேவைக்கான ஆகாரங்களுமே இருந்தன. இக்கப்பலில் வந்த மருந்துகள் பலவற்றை அக்காலகட்டத்திலிருந்த மருத்துவர்கள் கொள்ளையடித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இவர்கள் யார் என்று பார்க்கின்றபோது தற்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் வட மாகாண சபையிலும் அங்கத்தவர்களாக உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளே விசவாயுக்களை பயன்படுத்தினர் என்றும் இராணுவத்தினர் அல்ல என்று போர்க்களத்தில் நின்ற சரத் பொன்சேகா அவர்கள் 2008.11.09 அன்று தெரிவித்திருந்தார். இப்போர் நடவடிக்கையின் போது சரத் பொன்சேகா அவர்கள் விடுதலைப்புலிகளின் இறுதி இடமாகிய முள்ளிவாய்க்கால் பகுதி வரை கொண்டு சென்றிருந்தார். இப்பகுதி இருபது கிலோமீற்றர் சுற்றுவட்டத்துக்கள் உள்ளடக்கப்பட்டது. விடுதலைப்புலிகளும் பொதுமக்களும் சேர்ந்திருந்த காரணத்தால் யார் புலிகள் யார் பொதுமக்கள் என்று இனங்காண முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இச்செய்தியினை மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் சரத் பொன்சேகா அவர்கள் தெரிவித்திருந்த போது நிலைமை இப்படி இருக்கிறது அடுத்த கட்டம் என்ன செய்வது என்று வினாவிய போது களத்திலிருந்து உடனே சரத் பொன்சேகா அவர்கள் தலைநகருக்கு அழைக்கபட்டு சீனாவுக்கு சென்று வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டபாய இராணுவப் பொறுப்பை ஏற்றார். எஞ்சியிருக்கும் இப்பகுதியையும் முற்றாக அழித்து விடுமாறு பணிக்கப்பட்டார். இதன்போது யார் யார் சாகிறார்களோ அதைப்பற்றிக் கவலையில்லை. இத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று பொன்சேகா முடிவெடுத்தார்.

கூடியபாகம் பார்க்கின்ற போது இப்போரின் வெற்றிக்கு சரத்பொன்சேகாவே காரணமாக இருந்தார். முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதத்தை வைத்திருந்தார்கள் என்று இராணுவம் கூறியிருந்தாலும் இவற்றை ஏன் பாவிக்க வில்லை என்பதில் சந்தேகம் தோன்றுகின்றது. தமிழீழவிடுதலைப்புலிகள் 1990ஆம் ஆண்டே யாழ்ப்பாணம் கோட்டையைத் தாக்கியபோது அவர்கள் உருவாக்கிய பசிலன் செல் 200 என்ற குண்டைப் பயன்படுத்தியிருந்தனர். அக்குண்டின் அதிர்வால் கோட்டையிலிருந்த இராணுவம் தாமாகவே புறப்பட்டு மண்டைதீவுக்கு சென்றது. இதனால் கோட்டை புலிகளின் வசமானது. அக்காலத்திலிருந்தே தமிழீழவிடுதலைப்புலிகள் குண்டுகள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிப்பதில் தலைசிறந்து விளங்கினர்.

images (4)

விடுதலைப்புலிகள் தயாரித்த நீர்முழ்கிக் கப்பல்கள், டோராப் படகுகள், தன்னியக்கத்துப்பாக்கிகள் என்பனவும் தற்போது முல்லைத்தீவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயுத உற்பத்தியிலும் அனைத்து கட்டமைப்புக்களிலும் தாம் சிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதாகவே இவ்விடயம் அமைந்திருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் இராணு வத் தரப்பினரிடம் கூட இப்படியான செல்கள் இல்லை. இராணுவம் பயன்படுத்தியது மல்ரி பெரல்கள் மாத்திரமே. நவீனமானது என்று குறிப்பிடலாம். கொத்துக்குண்டை பாவித்ததாக கடந்த வாரம் மன்னார் ஆயர் அடித்துக் கூறியிருந்தார்.

இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசுக்கு அதிநவீன சட்டலைட் தொழிநுட்பங்கள், மற்றும் கொத்துக்குண்டுகள், உளவறியும் விமானங்கள் என்பனவற்றை வழங்கியிருந்தன என்பது அக்காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. தற்கொலைப்படையை பிரபாகரன் வைத்திருந்த காரணத்தால் எல்.ரி.ரி.ஈ அமைப்பினர் உலகநாடுகளால் ஓரங்கட்டப்பட்டது மட்டுமல்லாது பிரபா கரனின் தலைமைத்துவமும் மறுக்கப்பட்டு இன்று பிரபாகரன் அல்லாத தலைவர் ஒருவரை உருவாக்கி தமிழ்மக்களுக்கான சமஷ்டி ஆட்சியை உருவாக்குவதில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே போன்ற நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதனொரு கட்டமாகவே இம்முறை நடைபெற இருக்கும் சர்வதே நாடுகளின் மனிதஉரிமை மகாநாடு அமையப்பெறுகிறது. விடுதலைப்புலிகள் ஒரு நாட்டின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு ஏற்ப தம்மை பலப்படுத்தி வைத்திருந்தனர். பிரபாகரன் நினைத்திருந்தால் அதிநவீன சக்திவாய்ந்த குண்டுகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்தியிருக்கலாம். பல குண்டுகள் இன்னும் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இவற்றை வைத்துப் பார்க்கும் போது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தால் போராட்டத்துக்கும், தனக்கும் ;சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்படும் என்று கருதியிருப்பார் என்று பல்நாட்டு அரசியல்அவதானிகளும் கூறுகின்றனர்.

THINAPPUYAL    ERANIYAN