மஹிந்த வந்தால் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம் அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும்

111

 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்கின்றேன் என்றும் அதற்காக கிடைக்கப்பெறும் விருப்பங்கள் மிகவும் பலமானதாக அமைந்திருக்கவேண்டும் என்றும் ஜனநாயக கட்சித்தலைவர் சரத் பொன்சேகா இன்று (08) தெரிவித்தார்.

press_freedom_sri_lanka

எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் படி தன்னிடம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாராயின், நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம். காரணம் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு சட்டபூர்வ உரிமையோ அல்லது தார்மீக உரிமையோ அவருக்கில்லை. அது ஒரு சட்டவிரோத தேர்தலாகவே கருதப்படும்.

எப்படியும் நாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோமாயின், அது எமது கட்சியை பாதிக்கும். எனவே கட்சியை முன்னேற்றுவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும் சரியான முறைமையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

SHARE