முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் என்றுஅரசிற்கு வக்காளத்து வாங்கும் அமைச்சர் டக்ளஸ்!

173

ஜனாதிபதியை வரவேற்க நீங்கள் அனைவரும் வருகை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ வழங்கப்படும் எனக் கூறி வன்னி ஆசிரிய உதவியாளர்களை மிரட்டும் அமைச்சர் டக்ளஸ். வடமாகாண முதலமைச்சரை முட்டாள் என்றும் கூறினார்.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிலுநர்களாகவுள்ள வன்னிப் பகுதி ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ ஐ யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூலம் தான் பெற்றுத் தருவதாகக் கூறி ஆசிரிய உதவியாளர்கள் அனைவரையும் 13 ம் திகதி அன்று யாழ்.ரயில் நிலையத்திற்கு வருகை தந்து பலத்த கோசங்களை எழுப்பி ஜனாதிபதியை மகிழ்வித்து வரவேற்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வன்னி ஆசிரிய உதவியாளர்களுக்கு தனது சிறீதர் தியேட்டர் அலுவலகத்தில் வைத்து நேற்று 10.10.2014 ம் திகதி கூறியுள்ளார்.

13.10.2014 ம் திகதி ஜனாதிபதியை வரவேற்க நீங்கள் வருகைதரத் தவறுவீர்களானால் இப்படியேதான் குறைந்த சம்பளத்தில் இருந்து உங்களது வாழ்க்கையை அழித்துக் கொள்ளுவீர்கள் என்று மிரட்டியுள்ளதாக வன்னி ஆசிரிய உதவியாளர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கையாலாகாத வடக்கு மாகாண சபையை நீங்கள் நம்பாதீர்கள், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர்கள் வடமாகாண ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ ல் உள்ளீர்ப்பதாகக் கூறி நிறைவேற்றிய பிரேரணைகளை அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது.

இதெல்லாம் என்னால்தான் முடியும் நான்தான் இணக்க அரசியல் நடத்தி அரசாங்கத்திடம் எல்லாவற்றையும் மக்களுக்கு பெற்றுத் தருபவன் என்றும் கூறியதுடன், வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனை,  மு விக்னேஸவரன் என்று கூறி மு என்றால் என்னென்று தெரியுமோ முட்டாள் விக்னேஸ்வரன் என்றும் ஆசிரியர்கள் மத்தியில் கீழ்த்தரமாகக் கதைத்தார்.

 

SHARE